குவைத்தில் ஏற்பட்ட துயரமான கள்ளச்சாராய மரணங்களை தொடர்ந்து இரவு பகலாக சோதனை கும்பலாக 67 பேர் வரையில் சிக்கினர்:
குவைத்தில் கள்ளச்சாராய மரணங்களை தொடந்து நாடு முழுவதும் இரவு பகலாக நடத்தப்பட்ட சோதனையில் கள்ளச்சாராய உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 67 பேரை அதிகாரிகள் கைது செய்தனர்.
நாட்டில் இயங்கி வந்த 10 கள்ளச்சாராய உற்பத்தி தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டது. வங்காளதேசம், நேபாளம் மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்களே சிக்கிய 67 பேரில் பெரும்பாலானவர்கள். முதல் துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான ஷேக் ஃபஹத் யூசப் சவுத் அல்-சபாவின் மேற்பார்வையின் கீழ்,இந்த சோதனைகள் நடைபெற்றன.