சம்மாந்துறை ஜனாதிபதி விளையாட்டுக்கட்டிட தொகுதியில் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட பூப்பந்தாட்ட மைதானம் விளையாட்டு வீரர்களின் பயன்பாட்டுக்காக நேற்று வியாழக்கிழமை கையளிக்கப்பட்டது.
சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில், சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனீபா, சம்மாத்துறை பிரதேச சபை செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட், ஜனாதிபதி விளையாட்டுக்கட்டிட தொகுதி பொறுப்பாளர் ஏ.ஏ.சலாம், பூப்பந்தாட்ட வீரர்கள், விளையாட்டு ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விளையாட்டு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், இளைஞர்களுக்கான ஒரு முக்கிய அங்கமாக அமைந்துள்ளது.




