சம்மாந்துறை அல் உஸ்வா உயிர் காப்பு குழுவினருக்கு சம்மாந்துறை பிரதேச செயலகமும், அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையமும் இணைந்து அனர்த்தங்களின் போது பயன்படுத்தக் கூடிய மிதப்பு தோணிகளும் மற்றும் அனர்த்த பயிற்சிகளின் போது பாவிக்ககூடிய பொருட்களும் இன்று(20)வழங்கி வைக்கப்பட்டது.
சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மது ஹனீபா தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் அம்பாறை மாவட்ட அன்ர்த்த முகாமைத்துவ சேவை பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ சி.எம் ரியாஸ்,பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் ஜே.எம் ஜெமீல், பிரதேச செயலக அனர்த்த நிவாரண சேவைகள் உத்தியோகத்தர் எம்.எஸ்.எம் அஸாருத்தீன்,அல் உஸ்வா உயிர் காப்பு குழுவின் தலைவர் ஐ.எல்.எம் முஸ்தபா உட்பட உத்தியோகத்தர்கள் அல் உஸ்வா உயிர் காப்பு குழுவின் அங்கத்தவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.