சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரி கே.டி எஸ் ஜெயலத் அவர்கள் எதிர்வரும் 9ம் திகதி இடமாற்றலாகி பிபில பொலிஸ் நிலையத்திற்கு செல்லவுள்ளார்.
இவரின் சேவையை பாராட்டி கௌரவிக்கும் முகமாக சம்மாந்துறை பிரதேச செயலக கிராம சேவகர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட பிரியாவிடை நிகழ்வு இன்று(08) பிரதேச செயலகத்தில் கிராம உத்தியோகத்தர் ஐ.எல்.எம் ஒஜிஸ்கான் தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மது ஹனீபா அவர்கள் கலந்து கொண்டு பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு பொன்னாடை போர்த்தி கெளரவித்தார்.
இப் பிரியாவிடை நிகழ்வில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கருத்து தெரிவிக்கையில் சம்மாந்துறை பிரதேசத்தில் போதைப்பொருள் ஒழிப்பு, சிறுவர் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் மேம்பாடு,பெண்கள் சார் பிரச்சினைகள்,சுற்றுச்சூழல் பிரச்சினைகள்,காணி பிரச்சினைகள் என பல்வேறுபட்ட பிரச்சினைகளை சம்மாந்துறை பிரதேச எல்லைக்குள் கட்டுப்பாடுக்குள் கொண்டு வருவதற்கு பிரதேச செயலாளரோடு இணைந்து கிராம சேவகர்களின் அர்ப்பணிப்பும்,பங்களிப்பும் இன்றையமையாத ஒன்றாக காணப்பட்டதோடு அதற்காக நன்றிகளையும்,பாராட்டுகளையும் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் வீ.வாஸீத் அஹமட் உட்பட கிராம சேவகர்கள் கலந்து கொண்டனர்.