மஜீட். ARM.
கமு/சது/அல் ஹம்றா வித்தியாலய மாணவி, முகம்மட் அஸ்மி பாத்திமா அஸ்மா, நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் 133 புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார். கடந்த 18 வருடங்களில் பாடசாலையின் எந்தவொரு மாணவரும் பெறாத அதிகபட்ச மதிப்பெண்களைப் பெற்று, பாடசாலை சமூகத்திற்கு அவர் பெருமை சேர்த்துள்ளார்.
இந்த வரலாற்றுச் சாதனையை கொண்டாடும் விதமாக, அதிபர் S.H.M.பரீஸ் அவர்களின் தலைமையில் பாடசாலையில் சிறப்பு கெளரவிப்பு நிகழ்வு ஒன்று நடைபெற்றது.
இந்நிகழ்வில், EPSI இணைப்பாளர் A. அஹமட் லெவ்வை, ஆசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், SDEC உறுப்பினர்கள், மாணவர்கள் மற்றும் மாணவியின் பெற்றோர்கள் ஆகியோர் கலந்துகொண்டு மாணவிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
பாத்திமா அஸ்மாவின் இந்த வெற்றி, அவரது அயராத உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் ஆசிரியர்களின் சிறந்த வழிகாட்டலுக்கு கிடைத்த அங்கீகாரம். அவரது வெற்றி, வருங்கால மாணவர்களுக்கு ஒரு சிறந்த உதாரணமாகவும், உத்வேகமாகவும் அமையும்.
மாணவி பாத்திமா அஸ்மாவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், அவரது வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பாடசாலை சமூகத்தினருக்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்!