Ads Area

பலஸ்தீன மக்களுக்கு நீதி கோரி எதிர்வரும் வெள்ளிக்கிழமை சம்மாந்துறையில் மாபெரும் நிகழ்வு.

சம்மாந்துறை வாழ் முஸ்லிம்களுக்கு ஓர் அன்பான அறிவித்தல்.


எமது சகோதர பலஸ்தீன முஸ்லிம்களுக்கு ஆதரவான துஆப் பிரார்த்தனையும்.

மகஜர் கையளிப்பு நிகழ்வும்.


பலஸ்தீனத்திலே எமது சகோதர முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெறும் அநியாயங்களையும், அட்டூழியங்களையும் நாம் நாளாந்தம் சமுக ஊடகங்கள் வாயிலாகவும், தொடர்பு சாதனங்கள் வாயிலாகவும் அறிந்துகொண்டிருக்கிறோம்.


இவ்வாறான செயலை நாம் வெறுமனே மௌனிகளாக இருந்து பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்பதற்காக சம்மாந்துறையின் உயர் சபைகள் ஒன்றிணைந்து பலஸ்தீன மக்களுக்கு இறைவனின் உதவி கிடைக்க வேண்டும் என்பதற்காக துஆப் பிரார்த்தனை நிகழ்வொன்றையும், அதனைத் தொடர்ந்து சம்மாந்துறை பிரதேச செயலாளரிடம் சென்று அங்கு நடைபெறும் அறியாயங்களுக்கு எதிராக நாம் இருக்கிறோம் என்ற செய்தியை சொல்லும் மகஜர் ஒன்றையும் கையளிக்க ஏற்பாடு செய்துள்ளோம்.


இந்நிகழ்வு இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 2025.09.19ம் திகதி வெள்ளிக்கிழமை ஜும்ஆவைத் தொடர்ந்து பத்ர் ஹிஜ்றா ஜும்ஆப் பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெறும், இதில் அனைத்து சம்மாந்துறை வாழ் முஸ்லிம்களும் கலந்து பலஸ்தீனத்துக்கு ஆதரவான எமது நிலைப்பாட்டை உறுதிப்படுத்த ஒன்றுகூடுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.


நம்பிக்கையாளர் சபை.

பெரிய பள்ளிவாசல்,

சம்மாந்துறை.

வஸ்ஸலாம்.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe