தில்சாத் பர்வீஸ்.
வளமான நாடும் - அழகான வாழ்க்கையும்" எனும் தொனிப்பொருளின் கீழ் முன்னெடுக்கப்படும் உள்ளூராட்சி வாரத்தினை முன்னிட்டு, சம்மாந்துறை பிரதேச சபையின் ஏற்பாட்டில் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை, சம்மாந்துறை மாவட்ட ஆயுள்வேத வைத்தியசாலை, சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் ஆகியன இணைந்து நடாத்திய சுகாதார மற்றும் ஆரோக்கிய தின மருத்துவ முகாம் அப்துல் மஜீட் மண்டபத்தில் நேற்று (17) புதன்கிழமை இடம்பெற்றது.
சம்மாந்துறை பிரதேச சபையின் கெளரவ தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற மருத்துவ முகாமில் அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்கிரம பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இதில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா, சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் நெளசாத் முஸ்தபா, சம்மாந்துறை மாவட்ட ஆயர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.எஸ்.றிஸ்கா, சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் எம்.ஏ.கே. முஹம்மட், சம்மாந்துறை பிரதேச சபையின் கெளரவ உறுப்பினர்கள், வைத்தியர்கள், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், சுகாதர வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள், வைத்தியாசாலை, ஆயுள்வேத வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் பொது மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது இலவச கண் பரிசோதனை, ஆயுள்வேத மருத்துவ முகாம், தொற்றா நோய்களுக்கான பரிசோதனை மற்றும் தெளிவூட்டல் நிகழ்வும் இடம்பெற்றன.