சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி தேசிய பாடசாலை மாணவர்கள் 20 வயதுப்பிரிவு மேசைப்பந்தாட்ட போட்டியில் மாகாண மட்டத்தில் வெற்றி பெற்று வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளனர்.
இவ்வெற்றியை முன்னிட்டு கல்லூரி சமூகம் மாணவர்களை வாழ்த்தி வரவேற்றது.
கல்லூரி அதிபர் ஏ.ஆர்.எம்.உவைஸ் நழீமி (SLPS-1) தலைமையில் நடைபெற்ற விசேட காலை ஆராதனையில் பிரதி அதிபர், இணைப்பாடவிதான பொறுப்பாசிரியர், விளையாட்டுப் பொறுப்பாசிரியர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்கள் முன்னிலையில் மாணவர்களுக்கு பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டன.
இம்மாணவ வீரர்களுக்கான தேசிய மட்டப்போட்டிகள் எதிர்வரும் 15, 16, 17ம் திகதிகளில் பாணந்துறை, பண்டாரகம உள்ளக மைதானத்தில் இடம்பெறவுள்ளன.
மாணவர்கள் தேசியத்திலும் பிரகாசிக்க அனைவரும் பிரார்த்திக்குமாறு வேண்டப்படுகின்றனர்.
தகவல்:
STR-MMMV
Physical Education Unit.