(வி.ரி. சகாதேவராஜா)
வரலாற்று பிரசித்தி பெற்ற சம்மாந்துறை தமிழ்க் குறிச்சி ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த தீமிதிப்பு சடங்கு வைபவம் எதிர்வரும் 13ஆம் திகதி சனிக்கிழமை கதவு திறத்தலுடன் ஆரம்பமாகின்றது.
தொடர்ச்சியாக 10 தினங்கள் சடங்கு இடம்பெற்று , எதிர்வரும் 22 ஆம் திகதி திங்கட்கிழமை தீமிதிப்பு வைபவத்துடன் நிறைவுபெறவுள்ளது.
காரைதீவு கண்ணகையம்மன் ஆலய முன்னாள் கப்புவார் க.பாஸ்கரனின் ஆசீர்வாதத்துடன் ஆலயபிரதம பூசகர் நேமிநாதன் நிரோஸ் தலைமையில் சடங்குகள் இடம்பெற இருக்கின்றது .
தினமும் பகல் பூசை 1.00 மணிக்கும் ,இரவு பூசை 7 மணிக்கும் இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது என ஆலய பரிபாலன சபையின் தலைவர் சீனித்தம்பி சுப்பிரமணியம் தெரிவித்தார்.
15ஆம் திகதி திங்கட்கிழமை காலை 8 மணிக்கு ஸ்ரீ கோரக்கர் பிள்ளையார் ஆலயத்தில் இருந்து பாற்குடபவனி இடம்பெற இருக்கின்றது.
20 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை முத்துச்சரம் புறத்தில் அம்பாள் எழுந்தருளி வீதியுலா வருகிறார்.
22 ஆம் தேதி திங்கட்கிழமை காலை 6 மணிக்கு மஞ்சள் குளிக்கும் நிகழ்வு இடம் பெற்று தீமிதிப்பு வைபவம் இடம்பெறும் .
கூடவே ,அன்று அன்னதான நிகழ்வும் இடம்பெற இருக்கின்றது.
இறுதியாக 29ஆம் திகதி திங்கட்கிழமை இரவு எட்டாம் நாள் வைரவர் இடும்பன் திருச்சடங்கு இடம்பெறும் என்று ஆலய பரிபாலன சபைத்தலைவர் சீனித்தம்பி சுப்பிரமணியம் மேலும் தெரிவிக்கின்றார்.