Ads Area

சம்மாந்துறையில் இரண்டாம் மாடியிலிருந்து மீட்கப்பட்ட உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம்.

 பாறுக் ஷிஹான்.


உருக்குலைந்த நிலையில் ஆணின்  சடலம்  நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடொன்றின் இரண்டாம்  மாடியிலிருந்து மீட்கப்பட்டுள்ளளது.


சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிர்தௌவ்ஸ் பள்ளிவாயல் வீதியில் இன்று மதியம் இவ்வாறு உருகுக்லைந்த ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.


சடலமாக மீட்கப்பட்டவர் கடந்த 15 நாட்களாக காணாமற்சென்றிருந்த நிலையில், இவ்வாறு சடலமாக  மீட்கப்பட்டுள்ளதுடன், நீண்ட காலம் நிர்மாணிக்கப்பட்டிரந்த வீடொஒன்றின் 2ம் மாடியில் குறித்த சடலம் ஒன்று அழுகிய நிலையில் கிடப்பதாக வீட்டின் உரிமையாளர் முறைப்பாடொன்றினை   பொலிஸாருக்கு வழங்கியிருந்தார்.


இவ்வாறு உயிரிழந்தவர் 15 நாட்களாக காணாமற்சென்ற நிலையில் உறவினர்கள் தேடி வந்ததுடன், சம்மாந்துறை பிரதேசத்தைப்பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட  55 வயது மதிக்கத்தக்கவர் என தற்பொது அடையாளம் காணப்பட்டுள்ளார்.


மனநிலை பாதிக்ககப்பட்ட இவர், சகோதரி ஒருவரின வீட்டியல் தங்கியிருந்த நிலையில் காணாமற் சென்றிருந்ததாக பொலிஸாரின்  ஆரம்பக்கட்ட விசாரணையில் இரந்து தெரிய வந்துள்ளது.


இச்சம்பவம் தொடர்பாக  மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe