Ads Area

சம்மாந்துறை மல்வத்தை பிரதேசத்தில் இயற்கை உரம் இடுவதற்கு வயலுக்கு சென்றவர் மரணம், உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு.

 (பாறுக் ஷிஹான்)

 

இயற்கை உரம் (கோழி எரு) இடுவதற்கு வயலுக்கு சென்ற  நிலையில் உயிரிழந்தவரின் சடலம் மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் ஞாயிற்றுக்கிழமை (7) ஒப்படைக்கப்பட்டுள்ளது.


அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மல்வத்தை பகுதியில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்ட சம்மாந்துறை  மல்வத்தை ஆறாம் வீதியைச் சேர்ந்த 60 வயதான  அப்துல் மஜீத் ஞாயிற்றுக்கிழமை (7) உயிரிழந்திருந்தார்.


மல்வத்தை புதுக்காடு  பகுதியில் உள்ள காணியில் விவசாயம் செய்து வந்த நிலையில் இயற்கை உரம் (கோழி எரு) இடுவதற்கு அங்கு சென்ற நிலையில் விவசாயிக்கு   நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.


இதனை தொடர்ந்து சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்ற நிலையில் அவர்  மரணமடைந்திருந்தார்.


இவர் இருதய நோய்க்கு உள்ளான நிலையில் கடந்த காலங்களில் சிகிச்சை பெற்று  வந்தவர்  என தெரிய வந்துள்ளது.


குறித்த மரணம் தொடர்பில் சம்மாந்துறை பதில் நீதிமன்ற நீதிவானின் உத்தரவுக்கமைய  திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.எச்.அல் ஜவாஹிர் விசாரணையை முன்னெடுத்ததுடன் நெஞ்சு வலி காரணமாக ஏற்பட்ட தாக்கத்தினால் மரணம் சம்பவித்துள்ளதாக தெரிவித்து  சடலம. உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பிலான மேலதிக விசாரணையை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe