பாறுக் ஷிஹான்.
மட்டக்களப்பு தேசிய மாணவர் படையணியின் 38வது படைப்பிரிவின் புதிய கட்டளை அதிகாரியாக மேஜர் கே.எம்.தமீம் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் ஏ.பி.சி.ஆர் பிரேம திலக்க அவர்களின் பணிப்புரைக்கமைய லெப்டினன்ட் கேர்னல் பி.அருண சாந்த முன்னிலையில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள 38வது மாணவர் படையணி காரியாலயத்தில் தனது கடமையினை (08) திங்கட்கிழமை பொறுப்பேற்ற அவர், வடக்கு கிழக்கு மாகாணத்தில் குறித்த இப்பதவிக்கு தமிழ் பேசும் அதிகாரி ஒருவராக நியமிக்கப்பட்டிருப்பது வரலாற்றில் இதுவே முதற்தடவையாகும்.
இந்நிகழ்வில் படைப்பிரிவின் அதிகாரிகள், நிரந்தர உத்தியோகத்தர்கள் மட்டக்களப்பு பொலீஸ் அதிகாரிகள், கல்முனை கடற்படை பிரிவின் கடற்படை அதிகாரிகள், மற்றும் குடும்பத்தினர் எனப்பலரும் கலந்து கொண்டனர்.