(சர்ஜுன் லாபீர்)
சம்மாந்துறை பிரதேச செயலக கிராம சேவை உத்தியோகத்தர்களுக்கும் பொலிஸ் அதிகரிகளுக்குமிடையில் கிராமங்களின் பாதுகாப்பு சிவில் குற்றங்கள் சம்மந்தமான கலந்துரையாடல் ஒன்று (21) சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மது ஹனீபா தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தின் புதிய பொறுப்பதிகாரியாக டபிள்யூ.ஏ.என். பிரதிப் குமார கலந்து கொண்டு கிராம மட்டத்தில் காணப்படும் பொதுமக்கள் பாதுகாப்பு,சிவில் குற்றங்கள் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் சம்மந்தமாக கிராம சேவகர்களுக்கு தெளிவூட்டினார்.
மேலும் இந் நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் வி.வாஸீத் அஹமட் உட்பட கிராம சேவகர்களும் கலந்து கொண்டனர்.



