Ads Area

சம்மாந்துறையில் மூன்று பாலர் பாடசாலை மாணவ, மாணவிகளின் விளையாட்டு நிகழ்வு.

சம்மாந்துறையில் நெடுங்காலமாக ஆசிரியை சிஹாமா சியாஷ் அவர்களின் தலைமையில் இயங்கும் Ever Green school of English,House of English,Kids corner ஆகிய மூன்று பாலர் பாடசாலையின் மாணவ,மாணவிகளின் விளையாட்டு நிழ்வானது அண்மையில் (11.10.2025)  மாலை 03.30 மணியளவில் அல் மர்ஜான் மகளிர் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.


இந் நிகழ்வின் பிரதம அதிதியாக சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் I.L.M.மாஹிர் அவர்கள் கலந்து கொண்டதுடன், கௌரவ அதிதியாக சம்மாந்துறை பிரதேச செயலாளர் தேசபந்து S.L.M.ஹனீபா அவர்களும், சிறப்பு அதிதிகள் வரிசையில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சம்மாந்துறை இளைஞர் அமைப்பாளர், விளையாட்டுத் திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர் அர்ஷத் இஸ்மாயில், திட்ட உத்தியோகத்தர் S.L.சியாஸ், அல் மர்ஜான் கல்லூரி அதிபர் M.மாஹிர்,  Talent plus ஊடகத்தின் ஸ்தாபகத் தலைவர் அல்ஹாபிழ் றிசான் முஹம்மட் சில்ஹான் , வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக உத்தியோகத்தர் I.L.A.வஹாப், திட்ட உத்தியோகத்தர் Y.B.றிஸாட் அகியோர் கலந்து சிறப்பித்தனர்.


விளையாட்டு நிகழ்ச்சிகளின் நடுவர்களாக அம்பாரை மாவட்ட விளையாட்டு பயிற்றுவிப்பாளர் M.றிபாஸ், விளையாட்டுத் திணைக்கள உத்தியோகத்தர் A.M.நௌஸாட் ஆகியோர் கடமை ஆற்றினர்.


இவ் விளையாட்டு நிகழ்வில் இறுதியாக மஞ்சள் இல்லம் வெற்றி கொண்டதுடன் நிகழ்வுகள் இனிதே முடிவுற்றது.


இந்நிகழ்வில் பங்குபற்றிய பிள்ளைகளின் பெற்றோர்கள் பாடசாலை ஆசிரியைகளின் பங்களிப்பு உண்மையில் வாழ்த்தப்பட வேண்டியவை அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் உரித்தாகட்டும். உண்மையில் தலைமை ஆசிரியை சிஹாமா சியாஸ் அவர்களின் முயற்சி பாராட்டத்தக்கது.








Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe