சம்மாந்துறையில் அமைந்துள்ள தென்கிழக்குப் பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தில் கல்வி கற்று வரும் இரண்டாம் வருட மாணவர்களுக்கு வீடுகளை வாடகைக்கு விடுவது சம்மந்தமான கலந்துரையாடல் ஒன்று இன்று (2025-10-14) சம்மாந்துறை ஹிலால் பள்ளிவாசலில் இடம் பெற்றுள்ளது.
சம்மாந்துறையில் அமைந்துள்ள தென்கிழக்குப் பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தில் கல்வி கற்று வரும் இரண்டாம் வருட மாணவர்கள் தங்களுக்கான தங்குமிட விடுதிகளை வெளியில் ஏற்பாடு செய்து கொள்ளுமாறு பல்கலைக்கழக நிர்வாகத்தினால் அறிவுறுத்தப்பட்டமையினையிட்டு மாணவர்களுக்கான தங்குமிட வீடுகளை வாடகைக்கு கொடுக்கும் போது பின்பற்ற வேண்டிய விடையங்கள் தொடர்பில் அப்பிரதேச வீட்டு உரிமையாளர்கள் மற்றும் ஹிலால் பள்ளிவாசல் நிர்வாகத்தினர் ஆகியரோடு இக்கலந்துரையாடல் நிகழ்வு இடம் பெற்றுள்ளது.
மாணவர்களுக்கு வீடுகளை வாடகைக்கு வழங்கும் போது முறையான சட்டதிட்டங்களை மற்றும் ஒழுக்க விழுமியங்களைப் பின்பற்றி வீடுகளை வாடகைக்கு வழங்க வேண்டும் என இக் கலந்துரையாடலின் போது இறுதி முடிவு எட்டப்பட்டது.
இந் நிகழ்வில், வீரமுனை வட்டார சம்மாந்துறைப் பிரதேச சபை உறுப்பினர் கௌரவ ரிஸ்விகான், சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை தலைவர்-செயலாளர், பிரதேச பொலிஸ் உத்தியோகத்தர், கிராம சேவகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.






