Ads Area

சம்மாந்துறையில் புதிய ரக உழவுக் கலப்பை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

 ( வி.ரி.சகாதேவராஜா)


அம்பாறையில், சம்மாந்துறையில் புதிய ரக கலப்பை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது .


அறுவடை செய்யப்பட்ட வயலில் உள்ள வைகோலை மீண்டும் புரட்டி அதே மண்ணில்  தாளிடுவதற்கு இந்த கலப்பை உபயோகப்படுத்தப்படுகிறது.  


அம்பறையில் சம்மாந்துறை பகுதியில் இந்த புதிய கலப்பையை ஒரு விவசாயி கொள்வனவு செய்து வயலில் பயன் படுத்தி வருகிறார்.


அண்மையில் சம்மாந்துறை நீர்ப்பாசன திணைக்கள பங்களாவடி பணிமனையில் இப் புது கலப்பை அறிமுகப்படுத்தப்பட்டது .


விவசாயிகள்  சங்கத்தின் தலைவர் ஏ. எம் .நௌஷாட் மற்றும் விவசாய பிரதிநிதிகள் இதனை பார்வையிட்டார்கள்.


நிலத்துக்கு தேவையான முக்கிய அரிய கனிப்பொருள் சிலிக்கனாகும். அந்த சிலிக்கன் என்ற கனிப் பொருள் வைக்கோலில் நிறையவே இருக்கின்றது  எனவே வைக்கோலை எரிக்காது நிலத்திலே தாளிடுதல் மிகுந்த பிரயோசனப்படும். மண்ணும் வளமாகும். பயிரும் செழிப்பாக வளர்ந்து நல்ல அறுவடையை தரும்  என்றார் விவசாயிகள் சங்க தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான  ஏ.எம். நவ்ஷாட்  இந்த புதிய ரக கலப்பை தொடர்பாக குறிப்பிட்டார்.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe