Ads Area

அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் Dialog மற்றும் Airtel நிறுவனங்களுக்கு எதிராக முறைப்பாடு...!!

 அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் Dialog மற்றும் Airtel தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு எதிராக முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. 


நாம் ஊடகர் பேரவையின் தலைவரும்,  ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் செயற்குழு உறுப்பினருமான அட்டாளைச்சேனையை சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர். யூ எல் மப்றூக் மற்றும் அவரது நண்பர் U.L. அன்சார் ஆகியோர் இணைந்து இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளனர்.


தொலைத்தொடர்பு வசதிகளை வழங்கும் பொருட்டு Dialog மற்றும் Airtel தொலைத்தொடர்பு நிறுவனங்கள் முற்பணத்தைப் பெற்றுக் கொண்ட பின்னர், கடந்த 27ஆம் திகதியில் இருந்து இன்றுவரை, எந்தவித முன்னறிவித்தலுமின்றி தங்களுடைய தொலைத் தொடர்பு வசதிகளை வழங்காமல் இவர்கள் ஏமாற்றியுள்ளனர்.


மேலும் தொலைத்தொடர்பு வசதிகளை வழங்காத நாட்களுக்கும் சேர்த்து, பணத்தை அறவிட்டு இந்த நிறுவனங்கள் மோசடி செய்துள்ளன.


அதேவேளை முன்னறிவித்தலின்றி இவர்கள் தொலைத்தொடர்பு வசதிகளை இடைநிறுத்தியமையினால், எமது தொழில் நடவடிக்கைகள் முற்றிலுமாக முடங்கியுள்ளன.


மேலும் நாட்டில் பேரிடர் ஏற்பட்ட காலப்பகுதியில், இவர்கள் இவ்வாறு முன்னறிவித்தலின்றி தொலைத்தொடர்பு வசதிகளை முடக்கியமையினால், எமது குடும்பத்தவர்கள் மற்றும் நண்பர்களின் நலன்கள் பற்றி அறிய முடியாத நிலை ஏற்பட்டது. அதன் காரணமாக நாங்கள் மன உளைச்சலுக்கு ஆளானோம்.


எனவே, இந்த இரண்டு நிறுவனங்களின் ஏமாற்று மற்றும் மோசடி வேலைகளுக்கு எதிராக - சட்ட நடவடிக்கை எடுக்குமாறு, எங்கள் முறைப்பாட்டில் கோரிக்கை விடுத்திருக்கின்றோம்.


இது தனிப்பட்ட முறைப்பாடு அல்ல; பாதிக்கப்பட்ட அனைத்து மக்களின் சார்பானது.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe