மட்டக்களப்பு மாவட்ட மக்களும் திணைக்களங்களும் இணைந்து சேகரித்த நிவாரணப் பொருட்கள் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் நுவரெலியா மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபரிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டது.
அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தால் மிக அதிகளவில் பாதிக்கப்பட்ட பகுதிகளை உள்ளடக்கிய மாவட்டமாக நுவரெலியா அடையாளப்படுத்தப்படுவதால், இந்த உதவிகள் அங்குள்ள மக்களுக்கு மிக அவசியமானதாகும்.
மிக முக்கியமான அத்தியாவசியப் பொருட்களே இதில் இடம்பெற்றிருந்ததால், நிர்வாக உத்தியோகத்தர்கள், அப்பகுதி மக்கள் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட முப்படையினர் அனைவரும் மகிழ்ச்சியுடன் இந்த நிவாரணங்களை பெற்றுக்கொண்டனர்.
மட்டக்களப்பில் இருந்து வந்த இந்த அனுதாபப் பரிசே அவர்களுக்கு கிடைத்த மிகப் பெரும்பான்மை நிவாரணமாக இருந்ததை அவர்கள் தெரிவித்தனர். அனைவரின் ஒருங்கிணைந்த பங்களிப்புக்கும் நன்றியையும் தெரிவித்தனர்.



