Ads Area

சம்மாந்துறையில் விமர்சனத்திற்கு உள்ளான உணவகத்திற்கு 48,000/- அபராதம் மற்றும் சீல் வைப்பு.

சம்மாந்துறையில் கடந்த சனிக்கிழமை (06.12.2025) பிரபல உணவகம் ஒன்றில் கைப்பற்றப்பட்ட தரமற்ற மற்றும் பாவனைக்கு ஒவ்வாத உணவுகள் தொடர்பான வழக்கு, இன்று (09.12.2025) சம்மாந்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டுத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


​உணவுப் பாதுகாப்பு மற்றும் பொதுச் சுகாதாரத்தைப் பேணும் விதமாக, கெளரவ நீதிமன்றம் பின்வரும் தீர்ப்பை வழங்கியுள்ளது:


​உணவக உரிமையாளருக்கு 48,000/-  அபராதம் விதிக்கப்பட்டது


​எதிர்வரும் 19.12.2025 வரை உணவகத்தை மூடி, அனைத்துத் திருத்த வேலைகளையும் சுகாதார விதிமுறைகளுக்கு அமையச் செய்தல்.


​நீதிமன்றத்தின் இந்த உத்தரவின் பிரகாரம், எமது பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் (PHIs) குழுவினர், இன்று சம்பந்தப்பட்ட உணவகத்தை முறையாக மூடி (சீல் வைத்து) தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளனர்.


குறித்த உணவகம் தொடர்பில் முன்னர் வந்த செய்தியின் விபரம் - https://www.sammanthurai24.com/2025/12/MOH-sammanthurai_01052249351.html




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe