Ads Area

சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் விவசாயிகள், வெள்ள நிவாரணப் பணியாளர்களுக்கு விடுக்கும் முக்கிய அறிவிப்பு.

கனமழை மற்றும் வெள்ளத்தால் அசுத்தமான நீர் மண்ணுடன் தொடர்புகொள்வதால் ஏற்படும் லெப்டோஸ்பைரோசிஸ் (Leptospirosis) அபாயம் மிக அதிகம்.


​முக்கிய தடுப்பு நடவடிக்கை.


​Doxycycline (டாக்ஸிசைக்ளின்): 


அதிக ஆபத்துள்ள பணியாளர்கள் மற்றும் விவசாயிகள் MOH / PHI ஆலோசனையின் பேரில் முன்னெச்சரிக்கை மருந்தாக (Prophylaxis) இந்த மாத்திரையை எடுத்துக்கொள்ள வேண்டும்.


​பாதுகாப்புக் கவசங்கள்: 


ரப்பர் பூட்ஸ் (Gum Boots), கையுறைகள் அணிவது கட்டாயம். காயங்கள் அசுத்தமான நீரில் படாமல் பாதுகாக்கவும்.


​அறிகுறிகள் கண்டால் உடனே மருத்துவரை அணுகவும்.


​திடீர் காய்ச்சல், கடுமையான தசை வலி (கால்), கண்கள் சிவப்பாதல், மஞ்சள் காமாலை போன்றவை இதன் முக்கிய அறிகுறிகள். சிகிச்சை தாமதமானால் உயிருக்கே ஆபத்து!


​விழிப்புடன் இருங்கள்! பாதுகாப்பாகப் பணியாற்றுங்கள்!


இன்று, வளத்தாப்பிட்டி பகுதியில் விவசாயிகளுக்கு Doxycycling மாத்திரைகள் விநியோகிக்கப்பட்டன.


​#லெப்டோஸ்பைரோசிஸ் 

#எலிகாய்ச்சல் 

#Doxycycline 





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe