( வி.ரி.சகாதேவராஜா)
அம்பாறை மாவட்டத்தின் கரையோரத்திலுள்ள காரைதீவுக் கிராமத்தை காவு கொள்ள கடல் முனைகிறது. கடலருகேயுள்ள சுனாமி மற்றும் திருவாதிரை நினைவுத் தூபிகளையும் கிணறுகளையும் தென்னைகளையும் கடல் உள்வாங்கி கொண்டது. மேலும் காரைதீவு பிரதேச சபைக்கு சொந்தமான கடற்கரைப் பூங்கா மதிலை கடலலைகள் மோதிப்பார்க்கின்றன.
கடல் கொந்தளிப்பு காரணமாக அதுவும் அபாயநிலையில் உள்ளது. முகத்துவாரங்கள் சீராக செயற்படுவதால் வெள்ளம் கட்டுப்பாட்டிற்குள் உள்ளது. மேலும் வெள்ளத்தில் குளவெளி மற்றும் கண்ணகி கிராமம் கூடுதலாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. இடம் பெயர்ந்தும் அகதி முகாம்களில் தங்காதபடியினால் அரச நிவாரணம் இன்னும் கிடைக்கவில்லை.



