( வி.ரி.சகாதேவராஜா)
மட்டு .அம்பாறை மாவட்டங்களில் தடைப்பட்ட பகுதிகளுக்கு இன்னும் 4 தினங்களில் மின் இணைப்பை வழங்க வேலைத் திட்டங்கள் துரித கதியில் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.
அம்பாறை, மஹியங்கனை மற்றும் வவுணதீவு ஆகிய வலயங்களுக்கு தேவையான மின்சாரத்தை வழங்கத் தேவையான கோபுரத்தை அமைக்கும் பணியில் இலங்கை மின்சார சபையின் ஊழியர்கள் தற்போது இரவு பகல் பாராமல் ஈடுபட்டுள்ளனர்.
நாட்டில் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக குறித்த கோபுரம் முற்றாக சேதமடைந்துள்ளது.
இதனால் அம்பாறை, மஹியங்கனை மற்றும் வவுணதீவு ஆகிய வலயங்களுக்கான மின்சாரம் கடந்த ஏழு நாட்களாக தடைப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ரன்தம்மே, மஹியங்கனை 132kV உயர் மின்னழுத்த இனைப்பின், 15ஆவது கோபுரமே இதுவாகும்.

