Ads Area

காத்தான்குடி மக்களினால் வழங்கப்பட்ட முதற்கட்ட நிவாரணம் மூதூரை சென்றடைந்தது!

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட  மக்களுக்கு காத்தான்குடியில் சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருட்களின் முதற்கட்டம் மூதூர் மக்களுக்கு பகிர்ந்;தளிக்கவென அனுப்பவதற்காக காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் கடந்த 1ம் திகதி திங்கட்கிழமை  இராணுவத்தினரிடம் கையளித்தது.


அண்மையில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ள அனர்த்தம் காரணமாக நாட்டின் பலபாகங்களிலும் வெகுவாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கவென ஒட்டமொத்த காத்தான்குடி மக்களின் பங்களிப்பாக நிவாரணப் பொருட்கள் சேகரிக்கப்பட்டன. இதில் காத்தான்குடி ஜமஇய்யதுல் உலமா சபைஇ காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம்இ காத்தான்கடி நகர சபைஇ வர்த்தக சங்கம் உட்பட காத்தான்குடியில் செயற்படும் பதிவு செய்யப்பட்ட சமூகசேவை அமைப்புக்கள் ஒன்றிணைந்து இந்நிவாரணத்திட்டத்தினை ஏற்பாடு செய்திருந்தது. 


இவ்வாறு சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருட்களில் முதற்கட்டமாக மூதூரில் பாதிக்கப்பட்ட 500 குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்க தலா 5000.00 ரூபாய் பெறுமதியான பொதிகள் காத்தான்குடி மக்கள் சார்பாக மூதூர் பிரதேச செயலாளரிடம் வழங்கி வைக்கப்பட்டதாக பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன தலைவர் எம்.சீ.எம்.ஏ.சத்தார் தெரிவித்தார்.


குறித்த நிவாரணப் பொருட்களைக் கொண்டு செல்வதற்கு போக்குவரத்து தடைகாணப்பட்டதினால் இரானுவத்தினரின் உதவிகளைப் பெற்று அவர்களின் வாகனத்தினூடாக நிவாரணப் பொருட்கள் பாதுகாப்பாக மூதூருக்கு எடுத்துச் செல்லப்பட்டன.


மேலும் இந்நிவாரணத் திட்டத்தினூடாக சேகரிக்கப்பட்ட பொருட்களை ரூபா 5000.00 பெறுமதியான 5000 பொதிகளை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும்இ அவற்றை மட்டக்களப்பு வாகரைஇ பொலநறுவைஇ கண்டிஇ கம்பளைஇ பதுளைஇ மன்னம்பிட்டிஇ அனுராதபுரம் ஆகிய பிரதேசங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிர்ந்தளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அதற்கான பூர்வாங்க நடவடிக்கள் இடம்பெற்று வருவதாகவும் காத்தான்குடி சம்மேளனத்தின் தலைவர் சத்தார் மாவட்ட ஊடகப் பிரிவிற்கு கருத்துத் தெரிவித்தார். 


இந் நிவாரணம் கையளிக்கும் முதற்கட்ட நிகழ்வின் போது காத்தான்குடி நகர சபைத் தவிசாளர்இ காத்தான்குடி பிரதேச செயலாளர் இராணுவ உயர் அதிகாரிகள்இ ஜம்இயய்துல் உலமா சபைஇ வர்த்தக சங்கம்இ சிவில் அமைப்புக்கள் போன்றவற்றின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.








Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe