சமுர்த்தி திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் விசேட வீடமைப்பு செயற்திட்டத்தின் கீழ் சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவில் 03 வீடுகளுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எம்.பி.எம் ஹுசைனின் ஒருங்கிணைப்பின் கீழ் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மது ஹனீபாவின் தலைமையில் நேற்று (09) இடம்பெற்றது.
இவ் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினரும் அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், அரசியலமைப்புப் பேரவை உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா கலந்து கொண்டு சிறப்பித்தார்.
பிரதேச சபை உறுப்பினர்களான சம்மாந்துறை தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் வை.பி.எம் நவாஸ்,எஸ் தனோஜன்,நிர்வாக உத்தியோகத்தர் ஜே.எம் ஜெமில்,பாராளுமன்ற உறுப்பினரின் பொதுமக்கள் தொடர்பாடல் அதிகாரி எஸ்.எம் ஆரீப், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உட்பட கிராம உத்தியோகத்தர்கள் அலுவலக உத்தியோகத்தர்கள் பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர்கள் தேசிய மக்கள் சக்தியின் சம்மாந்துறை பிரதேச முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்புதரவை-02, செந்செல் கிராமம்-01, வீரமுனை-02 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் மேற்படி வீடமைப்பு செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதேநேரம் சமூர்த்தி 'சிறிவிமன' தேசிய செயற்திட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்ட வீடுகளும் பாராளுமன்ற உறுப்பினரால் பயனாளிகளிக்கு கையளிக்கப்பட்டது.என்பதும் குறிப்பிடத்தக்கது.





