Ads Area

சம்மாந்துறையின் கல்வி நிலை (1950- 2001)

1950ம் ஆண்டில் இவ்வூரின் இரண்டு முக்கிய பாடசாலைகள் திறக்கப்பட்டதன் பின்னர் 1960ம் ஆண்டு வரை வேறு எந்த பாடசாலையும் இங்கு திறக்கப்படவில்லை மாணவரை சிரேஷ்ட பாடசாலை தராதரப் பத்திர பரீட்சைக்கு (ளுளுஊ) ஆயத்தப்படுத்தும் ஒரே பாடசாலையாக மகாவித்தியாலயம் மாத்திரம் இருந்தது. இங்கு 1952 டிசம்பர் தொடக்கம் மேற்படி பரீட்சைக்கு மாணவர்கள் தோற்றிக்கொண்டிருந்தனர். இக் காலக் கட்டத்தில் சம்மாந்துறை மக்களும் அரசியலில் அநாதைகளாகவே இருந்தனர். ஆயினும் 1956ம் ஆண்டு பதவிக்கு வந்த சிறீ லங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தின் கருணையினால் இங்குள்ள பலருக்கு ஆசிரிய நியமனங்கள் கிடைத்தன.
அப்போது கல்வியமைச்சராக இருந்த டாக்டர் று.தஹாநாயக்க அவர்கள் ளுளுஊ சித்தியடைந்த அனைவருக்கும் ஆசிரியர் நியமனம் வழங்கலாயினார். இதனால் ஆசிரியர் சமூகமொன்று இங்கு உருவாகி ஆசிரியர் தட்டுப்பாடின்றி இருப்பதற்கான ஒரு சூழ்நிலை உருவாகியது. கல்விச் செயற்பாடுகளும் பாடசாலைகளில் தீவிரமடைந்தன. கல்வி கற்கும் மாணவர் தொகையும் படிப்படியாக கூடிவரலாயின.
இக்காலத்தில் வெளியூர்களுக்குச் சென்று உயர்கல்வி பெற்ற பலர் பல்கலைக்கழகப் பட்டதாரிகளாகவும் வெளியாயினர். இதனால் ஆங்கிலக் கல்வி கற்ற ஒரு மத்திய வகுப்பாரின் தோற்றமும் இங்கு உருவாகி வளர்ச்சியடைந்ததையும் அரசியல் விழிப்பு ஏற்படுவதையும் காணக்கூடியதாகவுள்ளது.
1960ம் ஆண்டிற்குப் பின்னர் கல்வி அபிவிருத்தி:-
சம்மாந்துறையின் கல்வி அபிவிருத்தி வரலாற்றில் 1960ம் ஆண்டிற்கு பிற்பட்ட காலத்தை “பொற்காலம்” என வர்ணிக்கலாம் . முன்னர் அரச உத்தியோகம் ஒரு 100பேரையும் தாண்டியிருக்காது. ஆனால் 1960ம் ஆண்டின் பின்னர் ஊரில் ஏற்படுத்தப்பட்ட பாடசாலைகள் , கல்வி நிறுவனங்களின் அபார வளர்ச்சியின் காரணமாக ஆயிரக்கணக்கான படித்தவர்கள் நிறைந்த சமூகமாக சம்மாந்துறை திகழ்க்pன்றது என்றால் அது மிகையான கருத்தல்ல.
1960ம் ஆண்டு முதல் 1994ம் ஆண்டு வரை சுமார் 34வருடங்கள் பாராளுமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் இருந்த அல்-ஹாஜ். ஏம்.ஏ.அப்துல் மஜீட் டீ.யு அவர்களின் முயற்சியினால் சம்மாந்துறையின் மூலைமுடுக்கெல்லாம் ஒன்றன்பின் ஒன்றாகப் பல பாடசாலைகள் உருவாகின .
சம்மாந்துறைக் கல்விக் கோட்டத்தில் இன்று 36பாடசாலைகள் உள்ளன. இவற்றில் 05 பாடசாலைகள் 1950ம் ஆண்டிற்கு முன்னர் திறக்கப்பட்டன. 06பாடசாலைகள் 1994ம் ஆண்டிற்குப் பின்னர் திறக்கப்பட்டன. ஜனாப்.எம்.ஏ.அப்துல் மஜீட் அவர்களின் காலத்தில் சுமார் 25பாடசாலைகள் திறக்கப்பட்டதுமல்லாமல் ஏற்கனவே இருந்த பாடசாலைகளை தரமுயர்த்தவும், தேவைகளை நிறைவேற்றவும் உதவிகள் கிடைக்கலாயின. இக்கால இடைவெளியில் 1972ஆம் ஆண்டு ஈழமேகம் ஜனாப் ஆஐடு.பக்கீர்த்தம்பி அவர்களைத் தலைவராயும், ஜனாப் ளுடுயு.றசீது அவர்களைச் செயலாளராகவும் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட சம்மாந்துறை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் முயற்சியினால் அமைச்சரைக்கொண்டு
1. கல்லரிச்சல் முஸ்லிம் வித்தியாலயம் (கஸ்ஸாலி வித்தியாலயம்)
2. செந்நெல்புரம் அல் ஹம்றா வித்தியாலயம்
3. கருவாட்டுக்கல் அரசினர் முஸ்லிம் வித்தியாலயம் (அறபா வித்தியாலயம்)
4. உடையார்குளம் முஸ்லிம் வித்தியாலயம் (அஸ் ஸமா வித்தியாலயம்)
5. அலவாக்கரை முஸ்லிம் வித்தியாலயம் (அல் அமீர் முஸ்லிம் வித்தியாலயம்)6. ஏத்தாலக்குளம் முஸ்லிம் வித்தியாலயம் (அப்துல் லத்தீப் முஸ்லிம் வித்.)
எனப் பல பாடசாலைகள் திறக்கப்பட்டன. மேலும் அகில இலங்கை ஆசிரியர் சங்கத்துடன் இணைந்து
Ø கைகாட்டியடி முஸ்லிம் வித்தியாலயம் (அல்-கஸ்ஸாலி வித்தியாலம்)
Ø கொட்டக்கட்டையடி முஸ்லிம் வித்தியாலயம்(ஹிஜ்றா முஸ்லிம் வித்தியாலயம்)
Ø ஸபூர் வித்தியாலயம்
Ø ஜமாலியா முஸ்லிம் வித்தியாலயம் என்பன தீவிரமாகத் திறக்கப்பட்டன.
இப் பாடசாலைகள் ஒவ்வொன்றுக்கும் நிறைய வரலாறுகள் உள்ளன. அவை அனைத்தையும் இங்கு குறிப்பிடல் சிரமமானது என்ற காரணத்தால் பொதுவான விடயங்கள் சில இங்கு முன்வைக்கப்படுகின்றன.
சம்மாந்துறையின் கல்வி நிருவாகம் நீண்ட காலமாக மட்டக்களப்புக் கல்விக் காரியாலயத்தின் மேற்பார்வையிலேயே நடைபெற்று வந்துள்ளது. இதனால் கல்வி அபிவிருத்திச் செயற்பாடுகள் மந்தகதியிலேயே நடைபெறலாயிற்று பின்னர் கல்வி நிருவாகப் பணிமனைகள் கல்முனை, அக்கரைப்பற்று போன்ற இடங்களில் இயங்கலாயின.
முன்னாள் கௌரவ பாராளுமன்ற உறுப்பினரும் , பிரதி அமைச்சருமான ஜனாப் எம்.ஏ.அப்துல் மஜீட் அவர்களின் முயற்சியினால் 1990.08.20ம் திகதி சம்மாந்துறைக்கெனத் தனியான ஒரு கல்விக் கோட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக முன்னாள்; பாராளுமன்ற உறுப்பினரும் , பிரதி அமைச்சருமான ஜனாப் யூ.எல்.எம்.முகையதீன் அவர்களின் முயற்சியினால் பெரும் போராட்டத்திற்கு மத்தியில் சம்மாந்துறைக்கெனத் தனியான ஒரு கல்வி வலயம் 1998.10.01ம் திகதி திறந்து வைக்கப்பட்டது. இச்செயற்பாடுகள் அனைத்தும் சம்மாந்துறையின் கல்வி அபிவிருத்திக்குப் பெரும் துணையாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பல்கலைக்கழக அனுமதியில் சம்மாந்துறைப் பாடசாலைகளின் பங்களிப்பு :-
பல்கலைக்கழக அனுமதியில் இப பிரதேசத்தில் மட்டுமல்ல அகில இலங்கை மட்டத்திலும் முஸ்லிம் பாடசாலைகள் மத்தியில் சம்மாந்துறைப் பாடசாலைகள் முன்னணி வகித்துவருவது குறிப்பிடத்தக்கதாகும்.
கிழக்கு மாகாணத்தில் முதல் முஸ்லிம் பட்டதாரியைப் பெற்ற பெருமை சம்மாந்துறைக்கேயுரியதாகும். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பிரதி அமைச்சருமான ஜனாப் எம்.ஏ.அப்துல் மஜீது அவர்கள் 1949ஆம் ஆண்டு முதலாவது முஸ்லிம் பட்டதாரியாக எமதூருக்குப் பெருமையைத் தேடிக்கொடுத்தார். இதனால் தொடர்ந்து பட்டதாரிகள் பலர் இங்கு உருவாகத தொடங்கினர்.
சம்மாந்துறையிலுள்ள பாடசாலைகளும் இவ்விடயத்தில் தமது பங்களிப்பைச் செய்துவரலாயின. கல்முனைக் கல்வி மாவட்டத்தில் பல்கலைக்கழக அனுமதியில் இரண்டாம் இடத்தைச் சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகாவித்தியாலயம் (தேசிய பாடசாலை) பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது. சம்மாந்துறைத் தேசிய பாடசாலை 1973ம் ஆண்டு முதன்முதலாக இரு மாணவிகளைப் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பிவைத்தது. முதலாவது ஆதம்பாவா அசானியும்மா என்பவர் கலைத்துறைக்கும், ஜென்னத் மேர்ஸா என்பவர் விஞ்ஞானத்துறைக்கும் தெரிவாகினர். இவர்களைத் தொடர்ந்து இப்பாடசாலை வருடா வருடம் கலை, வர்த்தகம், விஞ்ஞானம், கணிதம் ஆகிய சகல துறைகளுக்கும் மாணவர் பலரைப் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பி பெரும்பணியாற்றி வருகின்றது. 1973 ஆண்டு தொடக்கம் 2008ம் ஆண்டுவரை ஏறக்குறைய 850 மாணவருக்கும் அதிகமானோர் இப்பாடசாலையிலிருந்து பல்கலைக்கழகங்களுக்குச் சென்று உயர்கல்வி கற்று வெளியாகியுள்ளனர்.
சம்மாந்துறை அல்மர்ஜான் மகளிர் கல்லூரி 1989ம் ஆண்டு முதல் 2008 வரை 90 மாணவிகளையும் , சம்மாந்துறை தாறுஸ்ஸலாம் மகா வித்தியாலயம் 2001ம் ஆண்டு முதல் இன்று வரை 20 மாணவர்களையும் , சம்மாந்துறை அல் - அர்ஷத் மகா வித்தியாலயம் 2001ம் ஆண்டு முதல் இன்று வரை 15 மாணவர்களையும்; , வீரமுனை ஆர்.கே.எம்.மகா வித்தியாலயம் 2001ம் ஆண்டு முதல் இன்று வரை 08 மாணவர்களையும்; பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பிவைத்துள்ளன.
இதன் காரணமாக இன்று சம்மாந்துறையில் வைத்தியர்கள் , பொறியியலாளர்கள் , சட்டத்தரணிகள் , கணக்காளர்கள் , நிருவாக உத்தியோகத்தர்கள் என்று பல்வேறு துறை சார்ந்தவர்கள் நிறைந்து காணப்படுவது சிறப்பம்சமாகும். அத்துடன் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் , பதிவாளர்கள் , கலாநிதிப் பட்டம் பெற்றவர்கள் ,கல்விமாணி , முதுமாணிப்பட்டம் பெற்றவர்கள் என்று பலர் இவ்வூரைக் கலக்கியிருக்கின்றனர்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் , அமைச்சருமான ஜனாப் அன்வர் இஸ்மாயில் அவர்கள் சம்மாந்துறை மத்திய கல்லூரியிலிருந்து பல்கலைக்கழகம் சென்று சட்டத்தரிணியாக வெளிவந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இவ்வூரைச் சேர்ந்த பலர் தேசிய பல்கலைக்கழகங்களின் வெளிவாரி மாணவராகவும், தேசிய கல்வி நிறுவகம், திறந்த பல்கலைக்கழகம் என்பவற்றிலிருந்தும் பட்டதாரிகளாக வெளிவந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe