(எம்.எம்.ஜபீர்)
தேசிய வாசிப்பு மாத்தினை முன்னிட்டு சம்மாந்துறை பிரதேச சபையின் கீழுள்ள நூலகங்கள் இணைந்ததாக அமீர் அலி பொது நூலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசில்கள் வழங்கும் நிகழ்வு அமீர் அலி பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளரும் விசேட ஆணையாளருமான எம்.ஏ.கிதிர் முஹம்மட் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபையின் உள்ளுராட்சி உதவியாளர் எஸ்.கருணாகரன், அமீர் அலி பொது நூலகத்தின் நூலகர்களான ஐ.எல்.எம்.ஹனீபா, எம்.எம்.முனவ்வர், வீ.சீ.நூலகத்தின் நூலகர் ஏ.வீ.எம்.சர்ஜூன், தொழில் நூட்ப உத்தியோகத்தர்கள் மற்றும் நூலகங்களின் ஊழியர்கள், வாசகர்கள், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடாத்தப்பட்ட போட்டி நிகழ்வுகளில் வெற்றியீட்டிய மாணவர்கள் சான்றிதழ்கள் மற்றும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.