Ads Area

உயர் தரம் கற்கவிருக்கும் மாணவர்களுக்கான பயனுள்ள தகவல்.

உயர் தரம் கற்கவிருக்கும் மாணவர்கள் கவனத்திற்கு: (அறபு மதரஸாக்களிலும்)

கலைத்துறையை தெரிவு செய்யும் மாணவர்கள் எவ்வாறான பாடங்களை தெரிவு செய்ய வேண்டும் என்பதில் பல சிக்கல்களை எதிர் நோக்குகின்றனர்.

சிலர் பிரத்தியேக பாடங்களுக்கு மாணவர்களை இணைப்பதற்கு தவறாகவும் வழிகாட்டுகின்றனர். இதனால் மாணவர்கள் ஏமாற்றப்பட்டு நல்ல பேறுபேற்றை பெற்றும் சில நல்ல கற்கை நெறிகளுக்கு தெரிவாக முடியாமல் உள்ளது.

சரியான முறையில் கலைத்துறை மாணவர்கள் தமது பாடங்களை தெரிவு செய்வார்களாயின் அவர்கள் கலைத்துறையில் கற்றும் பின்வரும் கற்கைகளுக்கு தெரிவாக்கலாம். கலை படித்த ஒருவர் BSc பட்டம் கூட பெறலாம்.

அக்கற்கைகள் பின்வருமாறு

1. கலை
2 . தொடர்பாடல் கற்கை
3 . சமாதானமும் முரண்பாடு தீர்த்தலும்
4 . இஸ்லாமிய கற்கைகள்
5 . முகாமைத்துவ கற்கைகள்
6 . தகவல் தொடர்பாடல் தொழின்னுட்பம்
7. பட்டினமும் நாடு திடடமிடலும
8 . கட்டிடக்கலை
9 . நவநாகரிக வடிவமைப்பு
10 . நிலத்தோற்ற கடடடக்கலை
11 . வடிவமைப்பு
12 . சடடம்
13 . கணக்கிடலும் முகாமைத்துவமும்
14 . தொழில் முயட்சியும் முகாமைத்துவமும்
15 . கைத்தொழில் தகவல் தொழின்னுட்பம்
16 . முகாமைத்துவமும் தகவல் தொழின்னுடப்ப தொழில் கல்வி
18. பேச்சு செவிமடுத்தல் விஞ்ஞனம்
19. விருந்தோம்பல் சுற்றுலா முகாமைத்துவம்
20 தகவல் தொழின்னுடப்பமும் முகாமைத்துவமும்
21 . சுற்றிலா விருந்தோம்பல் முகாமைத்துவம்
22 . தகவல் முறைமைகள்
23 . மொழி பெயர்ப்பு கற்கைகள்
24 செயத்திடட முகாமைத்துவம்


ஆனால் இவற்றிக்கு சில சில பிரத்தியேக பாடங்கள் உண்டு. அப்படியான பாடங்களை எடுக்காதவர்களால் இக்கற்கைகளுக்கு செல்ல முடியாது. அத்தோடு கலை துறை க்கு வரும் மாணவர்கள் பெரும்பாலான கற்கைகளுக்கு செல்ல முடியுமான பாடங்களை தெரிவு செய்தல் வேண்டும்.

கலைத்துறையில் 4 தொகுதி பாடங்கள் உண்டு அவையாவன

1 . சமூக விஞ்ஞண பாடங்கள்
2 . சமயங்களும் நாகரீகங்களும்
3 . அழகிய கற்கைகள்
4 . மொழிகள்


# ஒருவர் 3 சமூக விஞ்ஞன பாடங்களை தெரிவு செய்வது சிறந்தது, அதிகமான கற்கைகளுக்கு தெரிவாகும் படங்களாக இருப்பது இன்னமும் வாய்ப்பு அதிகம் இருக்கும், சற்று கடினமானதாகவும் இருக்கலாம்.

# ஒருவர் இரு சமூக விஞ்ஞன பாடங்கள்யும் ஏனைய தொகுதியில் இருந்து ஒரு பாடத்தையும் தெரிவு செய்யலாம். அதிகமானோர் இரு சமூக விஞ்ஞன பாடங்களோடு சமய பாடத்தையும் எடுக்க விரும்புவர்.

# ஒருவர் ஒரு சமூக விஞ்சான பாடத்தையும் ஏனைய பிரிவில் இருந்து 2 படங்களையும் எடுக்க விரும்புவர். இது அதிகமான கற்கைகளுக்கு செல்வதற்கு வாய்ப்பு குறைவாக இருக்கும்.

மிக முக்கியம்

ஒருவர் சமூக விஞ்ஞன பாடம் எதுவும் எடுக்காமல் மற்றைய தொகுதியில் இருந்து 3 பாடத்தையும் எடுப்பதை தவிர்ந்து கொள்ளவும் அப்படியானவர்கள் கற்கைகள் மிகவும் குறைவு அவர்கள் கலைத்துறைக்கும் தெரிவு செய்யப்படமாடடார்கள்.

உதாரணமாக ஒரு மாணவன் தமிழ், இஸ்லாம், சித்திரம் ஆகிய பாடங்களை எடுத்தால் அவர் கலைத்துறைக்கு தெரிவு செய்யப்படமுடியாது.

சமூக விஞ்ஞான பாடங்கள் பின்வருமாறு

1. Economics
2. Political science
3. Geography
4. History
5. Home science
6. Ict
8. Accounting
9. Logic
10. Agri science


UGC

(இது இன்டர்நெட் இலிருந்து பெறப்பட்ட பயனுள்ள தகவல், பலரும் பகிர்ந்திருந்தமையால் தறுகிறேன்- எழுதியவர் யாரென தெரியவில்லை, அறிந்தவர் அறியத்தரவும்)
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe