சர்தார் மிர்ஷா.
சம்மாந்துறையை பிறப்பிடமாக கொண்டவரும் அம்பாரை மாவட்ட செயலக பிரதம கணக்காளருமான I.M ஹுசைன் அவர்கள் இன்று பதவி உயர்வு பெற்று கிழக்கு மாகாண பிரதி பிரதம செயலாளா் நிதிக்கு நியமணம் செய்யப்பட்டுள்ளார்.
இவா் 1991 ம் ஆண்டு இலங்கை கணக்காளா் சேவைக்கு இணைத்துக் கொள்ளப்பட்டு முதல் நியமணமாக திருகோணமலை உள்துறை அமைச்சின் கணக்காளராகவும் பின்பு அம்பாரை மாவட்ட செயலகம், சம்மாந்துறை பிரதேச செயலகம், புணர்வாழ்வு புணரமைப்பு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சு, இறக்காமம் பிரதேச செயலகம், நிந்தவூர் பிரதேச செயலகம் ஆகியவற்றில் சிறந்ததொரு கணக்காளராக கடமையாற்றியுள்ளார்.
அத்துடன் 2009 ம் ஆண்டிலிருந்து அம்பாறை மாவட்ட செயலக பிரதம கணக்காளராக பதவி உயர்வு பெற்று 9 வருடங்கள் மாவட்ட செயலகத்தில் பணியாற்றியதுடன் மாவட்ட செயலகத்தில் உள்ள தமிழ்,முஸ்லீம்,சிங்கள அணைத்து ஊழியர்களின் மனம்களில் என்றும் மறவாது இடம்பிடித்த இவா் எல்லோருடனும் அன்பாகவும், பண்பாகவுப், பழகும் இவா் ஒரு சமூக சேவையாளருமாவார்.
இவா் தனது ஆரம்பக் கல்வியை சம்மாந்துறை அல் மா்ஜான் மகளிர் கல்லூரியிலும் உயா் கல்வியை சம்மாந்துறை முஸ்லீம் மத்திய மகா வித்தியாலயத்தில் வா்த்தகப் பிரிவில் பயின்று யாழ் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டு விஞ்ஞானமாணி தொழில் நிர்வாகப் பட்டத்தினையும், கொழும்பு ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான முதுமாணி பட்டத்தினையும், பொது நிர்வாக முதுமாணி பட்டத்தினையும் பெற்றுக்கொண்டதுடன் மாவட்டத்தில் உள்ள ஒரு சிரேஷ்ட கணக்காளா் என்பதும் குறிப்பிடத்தக்கது