தகவல் - நபீல் நயீல்.
சம்மாந்துறை மக்களை போதைப் பொருள் பாவனையில் இருந்து பாதுகாப்பதற்காகவும், சம்மாந்துறைக்குல் போதைப் பொருட்கள் எக்காரணம் கொண்டும் உள்நுழையாதவாறு கட்டுப்பாடுகளை ஏற்படுத்தவும், போதைப் பொருள் பாவனையின் தீங்குகளைப் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டவும் “போதைப் பொருள் ஒழிப்புக் குழு” ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
சம்மாந்துறை வர்த்தக சம்மேளனம், சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள், பிரதேச செயலாளர், அனைத்துப் பள்ளிவாசல் தலைவர்கள் என ஏராளமானவர்களின் பங்குபற்றுதலோடு போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நேற்று (29-04-2018) சம்மாந்துறை பதுர் ஹிஜ்றா ஜும்மா பள்ளிவாசலில் இடம்பெற்றது.
இக் கலந்துரையாடலில் சம்மாந்துறையில் இருந்து போதைப் பொருள் பாவனையை ஒழிக்கும் விதமாக முக்கிய பல முடிவுகள் எடுக்கப்பட்டது இதன் அடிப்படையிலேயே “ போதைப் பொருள் ஒழிப்புக் குழுவும்” அமைக்கப்பட்டது,