சமூக சேவைகள் அமைச்சினால் 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த பிரஜைகளுக்குக்கான மாதாந்த கொடுப்பனவாக 2000 ரூபா வழங்கி வைக்கும் வேலைத்திட்டத்திற்கு அமைய சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 72 மூத்த பிரஜைகளுக்கு மாதாந்தக் கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு அண்மையில் சம்மாந்துறைப் பிரதேச செயலாளர் எஸ்.எம்.முகம்மட் ஹனீபா தலைமையில் பிரதேச செயலகத்தில் அண்மையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் அவர்கள் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு மாதாந்தக் கொடுப்பனவை வழங்கி வைத்தார்.