புதர்களுடன் பற்றைக் காடாய் காட்சியளித்த சம்மாந்துறை செந்நெல் கிராமத்தின் அஷ் ஸாலிஹாத் பெண்கள் மத்ரஸா மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலை, அல் ஹம்றா பாடசாலை போன்ற இடங்களை அண்மித்த பல வீதிகள் சம்மாந்துறைப் பிரதேச சபை உறுப்பினர் சஹீல் அவர்களின் முயற்சியால் துப்பரவு செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
சம்மாந்துறை செந்நெல் கிராமத்தின் அஷ் ஸாலிஹாத் பெண்கள் மத்ரஸா மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலை, அல் ஹம்றா பாடசாலை போன்ற இடங்களை அண்மித்த பல வீதிகள் பல காலமாக துப்பரவு செய்யப்படாது பற்றைக்காடுகளாக இருந்ததனால் மக்கள் அதனுாடக பயணிப்பதில் சிரமங்களை எதிர்நோக்கி வந்தனர்.
இதனை அறிந்த சம்மாந்துறைப் பிரதேச சபையின் உறுப்பினர் சஹீல் அவர்கள் சம்மாந்துறை பிரதேச சபைத் தவிசாளரிடம் முன்வைத்த எழுத்து மூல கோரிக்கைக்கு அமைவாக குறித்த அந்த வீதிகள் துப்பரவு செய்யப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டது.