சம்மாந்துறை அல்-அர்ஷத் பாடசாலையில் கல்வி கற்ற அன்பார்ந்த நண்பர்களே..!! சகோதரர்களே..!! அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்.
நம்மை பெற்றெடுத்து வளர்த்து ஆளாக்கிய நமது பெற்றோர் நமக்கு எவ்வளவு முக்கியமோ அது போல்தான் நமக்கு அகரம் கற்றுத் தந்து நாம் சிகரம் தொட காரணமாக இருக்கும் நமது பாடசாலையும் முக்கியமானது. அந்தப் பாடசாலையின் கல்வி-ஒழுக்கம் போன்ற அத்தனை விடங்களிலும் நாம் கவனம் செலுத்தி அதனை சீரிய பாதையில் கொண்டு செல்வது நம் ஒவ்வொருவர் மீதும் சுமத்தப்பட்டுள்ள பாரிய பொறுப்பாகும்.
நமது பாடசாலையில் உள்ள பழைய மாணவர்களை அனைவரையும் ஒன்றினைத்து “அல்-அர்ஷத் பழைய மாணவர்” சங்கம் என்ற அமைப்பு ஒன்றை உருவாக்கி அதனுாடாக நமது பாடசாலையின் அபிவிருத்திக்கு பாடசாலை நிர்வாகத்திற்கு பூரண ஒத்துழைப்பு வழங்கி அவர்களோடு நாமும் பயணித்து நமது பாடசாலையின் கல்வி முன்னேற்றத்துக்காக நாம் அனைவரும் பாடுபட வேண்டும்.
நமது பாடசாலைக்கான பழைய மாணவர் சங்கம் என்ற ஒரு குழு ஏலவே இருந்தாலும் அந்தக் குழுவினரையும் இணைத்துக் கொண்டு அவர்களின் வழிகாட்டுதல்களோடு மீண்டும் புதுப் பொழிவுடன் ஒரு பழைய மாணவர் சங்கத்தினரை உருவாக்கி அதனுாடாக நாம் அனைவரும் நமது பாடசாலையின் நலனில் அக்கறை செலுத்த வேண்டும்.
இதனடிப்படையில் நாளை ஞாயிற்றுக் கிழமை அதாவது 2018-05-06 அன்று பிற்பகல் 4.00 மணி அளவில் நமது அல்-அர்ஷத் பாடசாலையில் அனைத்துப் பழைய மாணவர்களும் சங்கமித்து புதிய புதுப் பொழிவுடனான பழைய மாணவர் சங்கம் ஒன்றை உருவாக்கி அதனுாடாக நமது பாடசாலையின் அபிவிருத்திக்கு பங்களிப்புச் செய்ய உள்ளார்கள்.
ஆகவே...அல்-அர்ஷத் பாடசாலையில் கல்வி கற்ற முடியுமான அனைவரும் நாளைய கூட்டத்திற்கு தவறாது சமூகமளிக்கும்படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.
மேலும்..நமது அல்-அர்ஷத் பாடசாலைக்கான பழைய மாணவர் சங்கம் என்ற ஒரு வாட்ஸ்அப் குழுவும் இருக்கிறது இதில் நமது பாடசாலையின் அத்தனை விடையங்ளும் ஆக்கபூர்வமாக அலசப்படவிருக்கிறது அல்-அர்ஷத் பாடசாலையில் கல்வி கற்றவர்கள் இந்தக் குழுவில் கீழே உள்ள லிங் ஊடாக இணைந்து கொள்ளலாம்.
இதோ அந்த வாட்ஸ்அப் லிங் - https://chat.whatsapp.com/33rsMXgIRWzGAkYXejkA3n
இப்படிக்கு
ஏற்பாட்டுக் குழு.
சம்மாந்துறை அல்-அர்ஷத் பழைய மாணவர்கள்.