நேற்று மாலை சம்மாந்துறை உட்பட அம்பாரை மாவட்டத்தின் சில பிரதேசங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது இதன் போது வீசிய பலத்த காற்றில் சம்மாந்துறை மஜீட்புர கிராமம் பாதிப்புக்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பாதிக்கப்பட்ட பிரதேச மக்களையும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களையும் அம்பாரை மாவட்ட அபிவிருத்தி குழுத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கெளரவ எம்.ஐ.எம் மன்சூர் பார்வையிட்டதுடன் அங்கு சம்மாந்துறை பிரதேச செயலாளர் உட்பட அதிகாரிகளும் பங்கேற்றனர்.
இங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை பெற்றுக்கொடுக்க பணிப்புரை வழங்கியிருந்தார்.