Ads Area

மைத்திரி-ரணில் அரசின் சட்டையைப் பிடித்து கேள்வி கேட்கும் பா.உ.மன்சூர் (வீடியோ இணைப்பு)

நல்லாட்சி அரசு அமைவதற்கு காரணமாக இருந்த சிறுபான்மை மக்கள் அதிலும் குறிப்பாக முஸ்லிம்கள் இன்று நல்லாட்சி அரசாங்கம் தொடர்பாக தவறு செய்து விட்டதாக உணரத் தொடங்கியுள்ளார்கள் என அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், சிரிலங்கா முஸ்லிம் காங்ரஸின் பாராளுமன்ற உறுப்பினருமான ஐ.எம்.ஐ மன்சூர்  தெரிவித்துள்ளார்.

சிறுபான்மையினம் என்ற ஒரே காரணத்தினால் அவர்களுக்கான அடிப்படை உரிமைகள் கூட இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் மீறப்படுகிறது, முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்திற்காக முஸ்லிம்களில் தகுதி வாய்ந்த உத்தியோகத்தர்கள் பலர் இருந்தும் ஒரு மாவட்ட அதிகாரியாக ஒரு முஸ்லிமை நியமிக்காது தகுதியற்றவர்களை நியமிக்கும் வக்கில்லாத அரசாங்கமாகவே இந்த அரசாங்கம் காணப்படுகிறது எனவும் தெரிவித்தார்.

நேற்றைய (20-06-2018) பாராளுமன்ற அமர்வில்  இலங்கை முஸ்லிம் சமூகத்தின் நன்மைக்காக மிகவும் துணிகரமாக, நல்லாட்சி அரசாங்கத்தின் சேர்ட்டை பிடித்து கேள்வி கேட்கும் அளவுக்கு பல்வேறு விடையங்களைச் சுட்டிக் காட்டி மிகவும் காரசாரமான உரையினை நிகழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

உரையினை வீடியோவில் காணலாம்.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe