முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், சம்மாந்துறை பிரதேச சபையின் தற்போதை உறுப்பினருமான ஐ.எல்.எம்.மாஹிரின் முயற்சியினால் நிர்மாணிக்கப்பட்ட சம்மாந்துறை முஸ்தாக் அலி இறக்கத்திற்கான பாலம் தற்போது முடிவுற்றுள்ளது.
சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவின் உடங்கா ஆற்றிற்கு குறுக்காகவுள்ள முஸ்தாக் அலி இறக்கத்திற்கான பாலம் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிரின் அயராத முயற்சியின் பலனாக மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சினால் கிராமிய பாலங்களை அபிவிருத்தி செய்யும் வேலைத் திட்டத்தின் கீழ் இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து நாட்டின் 04 கோடி ரூபாய் நிதியுதவியில் நிர்மாணிக்கப்பட்ட பாலம் தற்போது நிறைவுபெற்று பாலத்தினை விவசாயிகள் பயன்படுத்துகின்றனர்.
நிர்மாணிக்கப்பட்ட பாலத்தினை ஐ.எல்.மாஹிர் அவர்களுடன் மாஹிர் பவுண்டேசன் தலைவர் வை.வீ.சலீம் ஆகியோரும் நேரில் சென்று பார்வையிட்டனர்.
பாலத்தின் பழைய தோற்றம்.