Ads Area

பிரதி அமைச்சர் அமீர் அலி அவர்களே நான் எழுதிய மடலுக்காக என்னை மிரட்டுகிறீர்களா..??

பிரதி அமைச்சர் அமீர் அலி அவர்களே நான் உங்களுக்கு மடல் எழுதியது எதற்காக..!வாலாட்டுபவர்களை வைத்து அநாகரிகமான பின்னூட்டங்களை இட்டு என்னை மிரட்டுவதற்காக அல்ல.. மாறாக வாழைச்சேனை மற்றும் கல்குடா மக்களை பற்றி சிந்திப்பதற்காக …
___________________________________________________

கடந்த சில தினங்களுக்கு முன்னர் எனது முகநூல் வாயிலாகவும் சமூக வலைத்தளங்கள் ஊடகவும் கெளரவ பிரதி அமைச்சர் அமீர் அலிக்கு பகிரங்க திறந்த மடல் ஒன்றினை எழுதியிருந்தேன். நான் எதற்காக அந்த மடலினை எழுதினேன்.? அதில் அவரிடம் தெரிவித்த விடயங்கள் என்ன.? என்பவைகளை பற்றி பிரதி அமைச்சர் அமீர் அலி சிந்திக்காமல் அவருக்கு வாலட்டுக்கின்ற புல்லுரிவிகளை வைத்து அநாகரிகமான முறையில் முக நூல்களில் பின்னூடங்களை இடுவதனையும், என்னை மிரட்டுவதனையும் பார்க்கின்ற பொழுது அவர்கள் எவ்வாறு கல்குடா வாழைச்சேனை பிரதேசத்தில் 15 வருட காலமாக மக்களை மடையர்களாக்கி, தாங்கள் நினைத்தவாறு தங்களுடைய சுக போக வாழ்க்கையினை அமைத்து கொண்டுள்ளார்கள் என்பதனை கல்குடா சமூகத்திற்கு மட்டுமல்லாமல் தேசியத்திற்கும் சர்வதேச எமது உறவுகளுக்கும் ஒப்புவிக்கின்ற விடயமாக காண்பித்துள்ளார்.

ஒரு விடயத்தினை பற்றி ஒருவர் கூறுகின்ற பொழுது அல்லது பகிரங்கமாக திறந்த மடலினை எழுதுகின்ற பொழுது… அமீர் அலி உளரீதியாக அவருடைய பிரதேச மக்களுக்கு சேவை செய்ய கூடிய ஒருவராக இருப்பாரானால்.! அவர் தெளிவான முறையில் பதிலளித்திருப்பார். ஏன் என்றால்.! என்னுடைய நோக்கமும், பார்வையும் கல்குடா தொகுதியில் வாழக்கூடிய வாழைச்சேனை மக்களை பிரதி அமைச்சர் அமீர் அன்று தொடக்கம் இன்று வரைக்கும் பாரா முகம் கொண்டு பார்த்து வருவதுதான் முக்கியமான விடயமாக அமைந்திருந்தது. என்னுடைய பார்வையில் கல்குடா தொகுதி என்பது.. ஒரு முழுப்பிரதேசமாகவே இருக்கின்றது. அது ஓட்டமாவடி, மீராவோடை ,காவத்தமுனை, வாழைச்சேனை என்ற ஊர்களை அடையாளப்படுதும் முகமாக பிரிக்கப்பட்டிருந்தாலும் முழு கல்குடா முஸ்லிம்களினதும் வாக்குகளினால் தெரிவு செய்யப்படுகின்ற பிரதி நிதி ஊர் துவேசங்களை புறம்தள்ளி வைத்துவிட்டு பாரா முகம் பார்க்காமல் அபிவிருத்திகளை மேற்கொள்ள வேண்டும்.

எனவே அமீர் அலிக்கு வழங்கப்பட்டுள்ள இரண்டு பிரதி அமைச்சுக்களையும் வைத்துக்கொண்டு கல்குடா தொகுதியில் உள்ள வாழைச்சேனை மக்களுக்கு வாக்குறுதிகளை அள்ளி வீசுவதனை தவிர்த்து தனது சேவையினை செயலில் காட்ட வேண்டும் என்பதே நான் அமீர் அலிக்கு எழுதிய திறந்த மடலின் முக்கிய கருப்பொருள்லாக இருந்தது. இதனை புறிந்து கொள்ள முடியாலும், அதில் கூறப்பட்ட விடயங்களை உணர்ந்து கொள்ள முடியாமலும், சொல்லப்பட்ட விடயங்களை சிந்திக்காமலும் தான் வழமையாக கையில் எடுக்கும் ஆயுதமான அவமானப்படுத்தலை கையில் எடுத்துள்ளார். 

ஜனநாயக எல்லைக்குள் இருந்து கொண்டு தனக்கு எதிரான கருத்துக்களை தெரிவிக்கின்றவர்களை தான் போடுகின்ற எலும்பு துண்டுகளுக்கு வாலாட்டுகின்ற புல்லுருவிகளை வைத்துகொண்டு முக நூலில் மிகவும் அநாகரிகமான முறையில் பின்னூட்டங்களை இடுவதனூடாகவும், மிரட்டுவதனூடாகவும் நான் வாழைச்சேனை மக்களுக்காகவும், கல்குடா வாழ் உள்ளங்களுக்காவும் கையில் எடுதுள்ள குரலினை அடக்க முடியாது. அவ்வாறு அவர் அடக்க நினைக்கின்ற விடயமானது அரசியல் சானக்கியம் என்று தனக்கு தானே முகவரி கொடுக்கின்ற அவருடைய கீழ் தரமான அரசியல் நாகரீகத்தின் பிரதிபலிப்பாகவே நான் பார்க்கின்றேன்.

கல்குடா பிரதேசத்தில் முஸ்லிம் காங்கிரசின் கோட்டையாகவும், கிழக்கிழங்கையில் அதிகப்படியான உண்மையான முஸ்லிம் காங்கிரஸ் போராலிகளை கொண்டு பிரதேசமாக பெரும் தலைவர் மர்ஹும் அஸ்ரஃபினுடைய காலம் தொடக்கம் இன்று வரைக்கும் வாழைச்சேனை பிரதேசம் இருந்து வருகின்றது. அவ்வாறான வாழைச்சேனை மக்கள் அமீர் அலிக்கு வாக்களிக்க வில்லை என்பதற்காக அவர்களுடைய முக்கிய தொழிலான கடற்றொழிலினை மையமாகவைத்து (சொல்ல கூடாத வார்த்தையினை) அமீர் அலியிடம் உதவி தேடி வருகின்ற வாழைச்சேனை மக்களை பற்றி அவர்கள் சென்றதற்கு பிற்பாடு அவதூறாக பேசுகின்ற வரலாறுகள் அதிகமாகவே இருக்கின்றது. இன்று முஸ்லிம் காங்கிரசிலிருந்து பிரிந்து சென்ற அல்லது விரட்டப்பட்ட புல்லுருவிகள் அவருடன் இணைந்துள்ளதனை ஊடகங்களுக்கு பெரிது படுத்தி காட்டிக்கொண்டும், சமூக வலைத்தங்களில் தங்களுக்கு சாதகமாக எழுதுபவர்களை வைத்துக்கொண்டு அவ்வாறான புல்லுருவிகள் முஸ்லிம் காங்கிரசினுடைய தீவிர போராலிகள் என சமூகத்தினை நம்பவைக்க முற்படுவதானது அமீர் அலியினுடைய வங்குறோத்து அரசியல் என்று நான் சொல்வதை வேறு எவ்வாறுதான் கூற முடியும்.?


ஆகவே மீண்டும் நான் பகிரங்கமாக பிரதி அமைச்சர் அமீர் அலி அவர்களுக்கு கூறிக்கொள்வது……..வாழைச்சேனை தொடர்பாக தனக்கு கவலை இருக்கின்ற மாதிரியும், ஆதங்கபடுவதுமாதிரியும் நீங்கள் நடிக்கின்ற விடயங்களில் மக்கள் தற்பொழுது தெளிவாக உள்ளனர். கவலைக்கு பெரும் கூலியை வழங்குபவன் எல்லாம் வல்ல அல்லாஹ்வாக இருக்கின்றான். வாழைச்சேனையை பொருத்தமட்டில் சில சுயநலவாதிகளை கைகூலிகளாக வைத்துக்கொண்டு அவர்களை பொது நலவாதிகளாக வேசம் போட செய்திருக்கின்றீர்கள். அவர்கள் மக்கள் மத்தியில் உங்கள் முகஸ்துதிக்கு புகழ்பாடுபவர்களாகவும், உங்களுக்கு வால் பிடிப்பவர்களாகவுமே இருக்கின்றார்கள். இத்தகைய நிலையில் இருந்து நீங்கள் மாற வேண்டும். அதே போன்று அவர்களை உங்களுக்கு திட்ட மிட்டபடி ஜால்ரா அடிக்கின்ற படி நீங்கள் வாழைசேனையில் அரங்கேற்றி இருக்கின்ற நாடகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

அவ்வாறு நீங்கள் செய்யத்தவறினால் நாங்கள் உங்களை விடப்போவதில்லை. இது நாங்கள் உங்களைபோன்று சுய நலத்திற்காக ஆரம்பிதுள்ள போராட்டமல்ல. நாங்கள் சுயமாகவே கஸ்ட்டப்பட்டு உழைத்த பணமும் வருவாய்களும் எங்களுக்கு போதுமானதாகவும் சமூகத்திற்கு செய்யுமளவிற்கு அல்லாஹ் எங்களுக்கு தந்துள்ளான். உங்களை போன்று நாங்கள் அரசியலுக்கு வந்து உழைத்தவர்கள் கிடையாது. வாக்களித்து பாராளுமன்ற கதிரையில் உட்கார வைத்த சொந்த ஊர் மக்களை இன்னும் நீங்கள் மடையர்களாக்கி நீங்கள் நினைத்தமாதிரி வாழ்ந்து இறுதியாக குடும்பத்தின் கைகளில் உங்களுடைய அதிகாரத்தினை கொடுத்து விடலாம் என பகற்கவு மட்டு காணாதீர்கள். 

வாழைச்சேனை மற்றும் ஏனைய கல்குடா முஸ்லிம் பிரதேசங்களில் இருந்து நல்ல கருத்தாளர்கள், புத்திஜீவிகள், சமூகபற்றாளர்கள், கல்விமான்கள், சிந்தனையாளர்கள் என எங்களுடன் பல தரப்பினரும் உங்களுக்கு எதிரான இந்த சத்திய போராட்டத்தில் ஒருங்கிணைந்துள்ளனர். ஆகவே இவ்வாறு கீழ்தரமாக உங்களுடைய எலும்புகளுக்கு வாலாட்டும் புல்லுருவிகளை வைத்துக்கொண்டு நீங்கள் பொதுத்தளங்களில் அநாகரியமான முறையில் விமர்சனம் செய்வதும், வசைபாடுவதும் உங்களுக்கு ஆரோக்கியமான விடயமாக அமையாது என நான் நினைக்கின்றேன். 

நீங்கள் விடுகின்ற எந்த ஒரு பிழையாக இருந்தாலும் நாங்கள் பகிரங்கமாக சுட்டிக்காட்ட தவர மாட்டோம். எல்லாவற்றுகும் மேலாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைமையினை விமர்சிப்பதும், கல்குடாவின் அமைப்பாளராக இருக்கின்ற கணகறிஞர் றியால் மூலம் கல்குடாவில் புத்தியிர் பெற்று வரும் தூய அரசியல் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் றியாலினை திட்டமிட்டு உங்களுக்கு வாலாட்டும் புல்லுருவிகளை வைத்துக்கொண்டு சமூக வலைத்தளங்களில் அவமானபடுத்தி வரும் உங்களுடைய ஈன செயற்பாட்டினை இனியாவது நிறுத்தி முற்றுப்புள்ளி வைப்பதற்கு அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள். 

ஓட்டமாவடி பிரதேச சபையின் அதிகாரத்தினையும், இரண்டு பிரதி அமைச்சுக்களுக்குறிய அதிகாரங்களையும் வைத்திருக்கும் நீங்கள் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் நின்றும், வாழைச்சேனை ஓட்டமாவடி என்ற பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் நின்றும் அபிவிருத்திகளை செய்வதற்கு முயற்சிக்க வேண்டுமே தவிர அதிகாரம் இருக்கின்றது என்ற கர்வத்தோடு வாலாட்டும் புல்லுரிவிகளை வைத்து இனியும் கல்குடா மக்களை மடையர்களாக்கி சாதிக்க முடியும் என்ற உங்களுடைய சிந்தனைக்கு முற்றுப்புள்ளி வையுங்கள் அவ்வாறு நீங்கள் செய்யா விட்டால்.! அதற்கு எங்களால் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்பதனை தெரிவித்துகொள்கின்றோம்.

எனவே எனது முகநூலில் பின்னூட்டம் இடுகின்ற முகநூல் நண்பர்களை நான் வினயமாக கேட்டுக்கொள்வதானது…. நான் கல்குடாவில் தேர்தல் கேட்பதற்காகவோ, மீன் பிடி தொழில் ஈடுபடுவதற்காகவோ, விவசாயம் செய்வதற்காகவோ, அல்லது தொழில் பேட்டை அமைத்துகொள்வதற்காகவோ குரல் கொடுக்கவில்லை. கல்குடாவில் வாழுகின்ற எனது சமூகத்திற்கும் , உடன் பிறவா சகோதரர்கள் அனைவரும் அனுபவிக்கும் வகையில் அரசியல் ரீதியான சம அந்தஸ்த்தோடு, அபிவிருத்திகளும் இடம் பெற வேண்டும். அதை விடுத்து கல்குடாவில் பிறந்தவரான சகோதரர் அமீர் அலி அம்பாறையில் அரசியல் செய்கின்றார் என முக நூல்களில் அம்பாறை மக்கள் ஒரு பொழுது அவரை கீழ்த்தரமாக விமர்சித்தது கிடையாது. நாகரீகமான முறையில்தான் அமீர் அலி அவர்களுக்கு கருத்துக்களை தெரிவித்திருக்கின்றார்கள்.

ஒருவர் தவறினை விடுகின்ற பொழுது அதனை பகிரங்கமாக சுடிக்காட்டுவது ஜனநாயகத்தின் பன்பாக இருக்கின்றது. அதனை நீங்களும் பிரதி அமைச்சர் அமீர் அலியும் தெளிவாக விளங்கிகொள்ள வேண்டும். ஆகவேதான் அமீர் அலியினுடைய பதினைந்து வருட அரசியல் முதிர்ச்சி என்பது என்ன என்பதனை அவரினால் உருவாக்கப்பட்ட எலும்பு துண்டுகளுக்கு வாலாட்டுகின்ற புல்லுருவிகளினால் முக நூல்களில் எழுதப்படுகின்ற அநாகரிகமான விடயங்களை வைத்து தெளிவாக விளங்கிகொள்ள கூடியதாக இருக்கின்றது. அல்லாஹ் போதுமானவன்.. அவனே மிகப்பெரியவன்..


இப்படிக்கு நாபீர் பெளண்டேசனின் இஸ்தாபக தலைவர் பொறியியலாளர் உதுமான் கண்டு நாபீர்.(ஊடக பிரிவு)
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe