மஜீட்புர கல்வி மற்றும் கலாச்சார மேம்பாடு சங்க இளைஞர்களினால் மஜீட்புர பல்தேவைக்கட்டிடம், ( உப தபாலகம்) VTA ( கிராம சங்கம் ), மற்றும் அதனைச் சூழவுள்ள வடிகான்கள் போன்றவற்றில் பாரிய சிரமதான வேலைத்திட்டம் ஒன்று இன்று 22-06-2018 முன்னெடுக்கப்பட்டது.
இச் சிரமதான நிகழ்வுக்கு பல சிரமங்களுக்கு மத்தியில் மஜீட்புர கல்வி மற்றும் கலாச்சார மேம்பாடு சங்க இளைஞர் அணைவரும் ஊரின் நலனுக்காக அணி திரண்டு வந்து தங்களால் ஆன சிரமதான பணியினை செய்து கொடுத்தனர்.
மஜிட்புர கிராமத்தில் இன்னும் பல இடங்களில் சிரமதானப் பணிகள் செய்ய வேண்டிய தேவையுள்ளதனால் மஜீட்புர கல்வி மற்றும் கலாச்சார மேம்பாடு சங்க இளைஞர் அமைப்பினர் மஜிட்புர கிராம மக்களின் உதவிகளையும் வேண்டி நிற்கின்றனர்.
மஜீட்புர கல்வி மற்றும் கலாச்சார மேம்பாடு சங்க நண்பர்கள் அனைவருக்கும் சம்மாந்துறை24 இணையத்தளம் சார்பாக பாராட்டுக்களையும், நன்றிகளையும் தெரிவிப்பதோடு...உங்களது காத்திரமான பணியினை மஜிட்புர கிராமத்துக்கு வழங்க என்றும் முனைப்போடு இருக்க வேண்டும் என்றும் வேண்டிக் கொள்கின்றோம்.