செய்தி - ஜபீர்.
நமது சமூகம் இன்று பல்வேறு சவால்களுக்கு முகம்கொடுத்துள்ளனர். இவற்றுக்கு தீர்வுகாண்பதற்கு அனைத்து முஸ்லிம் தரப்பினரும் பேதங்களை மறந்து ஒன்றிணைய வேண்டும் என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினருமான ஐ.எல்.எம். மாஹிர் தெரிவித்துள்ளார்.
புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
புனித நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் முஸ்லிம்கள் அனைவருக்கும் எனது பெருநாள் வாழ்த்துக்கள். ஈத் முபாறக்! ஒரு மாத காலம் பசித்திருந்து, நோன்பு எங்களுக்கு பல்வேறு படிப்பினைகளை கற்றுத்தந்துள்ளது. பொறுமை, சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுப்பு என்பவற்றை வலியுறுத்தி நிற்கிறது. இவற்றை எமது வாழ்க்கையில் நாம் கடைப்பிடித்து நடக்க இத்திரு நாளில் உறுதி பூணுவோம்.
அவற்றுக்கு தீர்வு காண்பதற்கு அனைத்து முஸ்லிம் தரப்பினரும் ஒன்றிணைய வேண்டும். நாம் இன்று ஒற்றுமையிழந்தவர்களாக உள்ளோம். இத்தகைய நிலைமை சமூகத்தில் வீழ்ச்சியை ஏற்படுத்தும். எமது உரிமையை பெற்றுக்கொள்வதற்கு தடையாக அமையும். எனவே நாங்கள் அனைவரும் கட்சி பேதங்களை மறந்து சமூகத்தின் மேம்பாட்டுக்காக ஒன்றிணைந்து செயற்பட முன்வர வேண்டும். ஆகவே நாங்கள் குரோதங்களை மறந்து ஒன்றிணைந்து செயற்படுவதற்கு இன்றைய நந்நாளில் திடசங்கற்பம் பூணுவோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.