இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்கள் 14 பேர் கொண்ட குழுவொன்று சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் எகிப்திய குடியரசின் அழைப்பை ஏற்று இன்று பயணமாகின்றனர்.
எகிப்தில் இம்மாதம் 23-29 வரை பல நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவில் அம்பாரை மாவட்ட அபிவிருத்தி குழு இணைத்தலைவரும் சமுர்த்தி மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினரும் சம்மாந்துறை தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினருமான கெளரவ எம்.ஐ.எம்.மன்சூர் அவர்களும் பங்கேற்பதும் குறிப்பிடத்தக்கது..