சம்மாந்துறைப் பிரதேசத்திலுள்ள சமய ஸ்தலங்களின் வேண்டுகோளுக்கிணங்க சம்மாந்துறை பிரதேசத்தில் போதைப்பொருட்களை முற்றாக தடை செய்ய அண்மையில் சம்மாந்துறைப் பிரதேச சபையில் சபையின் கௌரவ தவிசாளர் AMM நௌசாத் அவர்களினால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானத்திற்கு இணங்க தற்போது சம்மாந்துறையில் உள்ள பொது இடங்களில் புகைத்தல் மற்றும் போதைப்பொருள் பாவனைகள் முற்றாக தடைசெய்யப்படவேண்டும் என்ற நோக்கத்தின அடிப்படையில் சம்மாந்துறையில் உள்ள சகல பொது இடங்களிலும் இன்று சம்மாந்துறை பிரதேசசபையின் ஊழியர்களினால் விழிப்புணர்வு மற்றும் அறிவித்தல் சுவரொட்டிகள், ஸ்டிக்கர்கள் ஒட்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.