சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை, வர்த்தக சங்கம் மற்றும் சமூக நலன்புரி அமைப்புக்கள் என்பன ஒன்றிணைந்து புகைத்தல், போதைப்பொருள் பாவணையற்ற சம்மாந்துறை” எனும் தொனிப்பொருளில் போதைப்பொருள் பாவணைக்கெதிரான நாளை நடைபெறவுள்ள விழிப்புணர்வு பேரணியும், மாநாடும் வெற்றிகரமாக நடைபெற என உளபூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் தெரிவித்தார்.
எகிப்திய பாராளுமன்றத்தின் விசேட அழைப்பின் பெயரில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையிலான குழுவில் நானும் தற்போது கெய்ரோ சென்றிருப்பதினால் என்னால் இவ்விழிப்புணர்வு பேரணிலும், மாநாட்டிலும் கலந்து கொள்ள முடியாமையிட்டு கவலையடைகின்றேன்.
எனவே, இதற்கான முயற்சிகளை மேற்கொண்ட நம்பிக்கையாளர் சபை, உலமா சபை, மஜ்லிஸ் அஷ்ஷீறா, வர்த்தக சங்கம், சமூக சேவை அமைப்புக்கள், இளைஞர் அமைப்புக்கள், அரச, அரசசார்பற்ற நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் நன்றியினையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.