சம்மாந்துறையின் முதலாவது புகையிரத சேவையாளரான எம்.பி.ஏ.கபூர் தனது 40 வருட சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்.
1978ம் ஆண்டு முதல் புகையிரத நிலைய அதிபர் பணியில் இணைந்து கொண்ட இவர் மட்டக்களப்பு, கொழும்பு கோட்டை, மருதானை, களனி, கொம்பனித்தெரு, பொலனறுவை, வாழைச்சேனை, ஏராவூர் புகையிரத நிலையங்களில் கடமையாற்றி இறுதியாக மட்டக்களப்பு புகையிர நிலையத்தின் பிரதான புகையிரத நிலைய அதிபராகவிருந்து தனது பணியினை நிறைவு செய்து கொண்டார்.
இவரது பணிக்காலத்தில் இவர் அரச உத்தியோகத்தர்களுக்கும், ஓய்வு நிலைப் பணியாளர்களுக்கும், ஆணைச்சீட்டில் பயணித்தவர்களுக்கும் மற்றும் ஏனைய பயணிகளுக்கும் மிகுந்த ஒத்துழைப்பினை வழங்கி முன்னுதாரணமான ஒரு அதிகாரியாக விளங்கினார்.
சம்மாந்துறை மத்திய கல்லுாரியின் மாணவரான இவர் சட்டக்கலை முதல் நிலையிலும் பயின்ற இவர் ஆங்கில மொழி டிப்ளோமாதாரியுமாவர். மும்மொழிகளிலும் தேர்ச்சி பெற்ற இவர் மொழிபெயர்ப்பாளராகவும், சமாதான நீதிவானுமாக தற்போது தொழிற்பட்டுக் கொண்டிருக்கின்றார்.
சம்மாந்துறையைச் சேர்ந்த முகைடீன் பாவா, பாத்திமா தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரான இவர் சம்மாந்துறையின் சிறந்த புகைப்படக் கலைஞரான மொஹமட் பிறோஸின் தந்தையுமாவார்.
செய்திக்கு நன்றி - அன்சார் காசீம்