சம்மமந்துறையினை அபிவிருத்தியின்பால் இட்டுச் செல்ல தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினராக நியமனம் பெற்றுள்ள கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயிலோடு இணைந்து செயற்படத் தயாராகவுள்ளேன். என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புப்குழு இணைத்தலைவரும், சமூக வலுவூட்டல் அமைச்சின் இணைப்பாளருமான எம்.ஐ.எம்.மன்சூர் தெரிவித்தார்.
சம்மாந்துறை அல்- அர்சத் மகாவித்தியாலயத்தின் விசேட கல்விப்பிரிவின் ஏற்பாட்டில் மாற்றுத்திறனாளி மாணவர்களின் விளையாட்டு விழா (28) பாடசாலை அதிபர் ஏ.எல்.ஏ.மஜீத் தலைமையில் அல்-அர்சத் மைதானத்தில் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையிலே- சம்மாந்துறை மண் அபிவிருத்தியில் பின்தங்கியும், எமது மக்களின் தேவைகளும், சவால்களும் அதிகமாக காணப்படுகின்றது. இவைகளை சரிசெய்வதற்காகவும், அரசியல் தலைமைகளுக்கு மத்தியில் புரிந்துணர்வும், ஒற்றுமையும் அவசியமாகும்.
அதன் அடிப்படையில் எமது சம்மாந்துறை மண்ணுக்கு தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினராக நியமனம் பெற்றுள்ள கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயிலோடு கருத்துவேறுபாடு இல்லாமல் எமது சம்மாந்துறை மண்ணின் அபிவிருத்திக்காகவும், மக்களின் தேவைக்காகவும் இணைந்து செயப்படத் தயாராகவுள்ளேன்.
சமூதாயத்தின் அரசியல் எதிர்காலத்துக்காக நாம் உழைக்க வேண்டும். அதற்காக இணைந்து செயற்பட வேண்டும். என்ற விண்ணப்பத்தினை நான் செய்துள்ளேன். அதனை அவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.
எனவே, சம்மாந்துறை மக்களின் எதிர்காலத்தை ஒளிமயமாக்க வேண்டும், சம்மாந்துறையின் அனைத்து அபிவிருத்தி வேலைத்திட்டங்களிலும் இன்ஸா அல்லாஹ் நாங்கள் இருவரும் இணைந்து பயணிக்க இறைவனிடம் அனைவரும் பிரார்த்திக்க வேண்டும். என்றார்.