Ads Area

மரக் கட்சிக்கு விரைவில் தாவவுள்ள மயில் கட்சியின் சம்மாந்துறை முக்கியஸ்த்தர்...??

கியாஸ் ஏ புஹாரி.

தேர்தல் நெருங்கும் இந்த தருணங்களில் தேசிய அரசில் பல்டிகள் அதிகரிப்பதைப் போல் பிரதேச அரசியல்களிலும் பல்டிகள் மும்முரமாகும் நிலைமை உதிக்கத் தொடங்குகின்றன.

இந்த கூற்றின்பால் சம்மாந்துறையிலும் முக்கிய புள்ளிகளின் கட்சித்தாவல்கள் இடம்பெறவிருப்பதாக அறியமுடிகின்றது.

அதாவது, இறுதியாக இடம்பெற்ற சம்மாந்துறைப் பிரதேச சபையின் அமர்வில் சபை அங்கத்துவத்தில் உயர்நிலையில் (பதவி) உள்ள இருவருக்கு வாய்த்தகராறு எழுந்துள்ளது. இவ்வாறு இடம்பெற்ற தகராறானது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய உறுப்பினர் ஒருவருக்கும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முக்கிய உறுப்பினர் ஒருவருக்குமிடையிலே இடம்பெற்றிருந்தது.

இச் சம்பவத்தையடுத்து குறித்த அ.இ.ம.க முக்கிய புள்ளி “தன்னால் இம்முறை மாகாண சபைத் தேர்தலில், தான் நினைத்தால் யானைச் சின்னத்தில் களம் இறங்க முடியும்” என்று கூறியதுடன், அவர் ஏற்கனவே பல தடவைகளில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவருடன் கட்சித் தாவல் குறித்து கலந்துரையாடியமையுள்ளமையும் அறியக் கிடைத்துள்ளது.

மேலும், பல விடயங்களை ஒப்பீடு செய்து பார்க்கையில் சம்மாந்துறையில் அ.இ.ம.க கட்சிக்கு ஒரு தூணாக இருக்கின்ற குறித்த முக்கிய புள்ளி மிக விரைவில் மு.காவுடன் கைகோர்க்கவிருப்பதாக வட்டாரத் தகவல்கள் மூலம் அறியக் கிடைக்கின்றது.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe