Ads Area

சம்மாந்துறை நலன்புரி மற்றும் அபிவிருத்திப் பேரவையின் (SWDC) வருடாந்த ஒன்று கூடல்.

சம்மாந்துறையின் கல்வி, கலை, கலாசாரம், பண்பாடு, அபிவிருத்தி போன்ற விடையங்களில் பங்களிப்புச் செய்யும் முகமாக ஆரம்பிக்கப்பட்ட சம்மாந்துறை நலன்புரி மற்றும் அபிவிருத்திப் பேரவையின் (SWDC) வருடாந்த ஒன்றுகூடல் அண்மையில் (24-08-2018), சம்மாந்துறை பிரதேச சபை கேட்போர்கூடத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

SWDC யின் செயற்பாடுகள், வேலைத்திட்டங்கள் பற்றிய பல விடையங்கள் பற்றி கலந்துரையாடப்பட்ட இந் நிகழ்வில் சம்மாந்துறை பாராளுமன்ற உறுப்பினர்கள், கல்விமான்கள், மார்க்கப் பெரியார்கள், உயர் அதிகாரிகள், அரச ஊழியர்கள், வியாபாரிகள், விவசாயிகள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் எந்த வித வேறுபாடுகளுமின்றி சம்மாந்துறையின் அபிவிருத்தியில் கரிசனை கொண்டு கலந்து தங்களது ஒற்றுமையினை வெளிப்படுத்தியிருந்தனர்.












Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe