Ads Area

விவசாய சங்கங்களுக்கு உதவ நாபீர் பவுண்டேஷன் துடிப்போடு செயற்படும்.

“நமது சமூக மிகவும் முக்கிய பாத்திரம் வகிக்கும் ஒரு பகுதியினர்களாகும். ஏனெனில் நமது அம்பாறை மாவட்ட்த்தின் பொருளாதார வளத்தின் முதுகெழும்பாகவும் அவர்கள் இருக்கின்றனர்” என நாபீர் பவுண்டேஷனின் ஸ்தாபகத் தலைவரும் அரசியற் செயற்பாட்டாளருமாகிய பொறியியலாளர் யூகே.நாபீர் தெரிவித்தார்..

சம்மாந்துறை உடங்கா பிரதேசத்தில் இயங்கி வரும் ஹிஜ்ரத் விவசாய சிக்கன கடனுதவி சங்கத்தினர் நாபீர் பவுன்டேசனை சந்தித்து அண்மையில் கலந்துரையாடலை மேற்கொண்டபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அங்கு உரையாற்றும் போது அவர் தெரிவித்தாவது :-

“விவசாயத் தொழில் முறையில் இன்றைய நவீன யுகத்திற்கு ஏற்ற மாற்றங்களை செய்து கொள்வதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான பல திட்டங்களை நான் வைத்திருக்கிறேன். இதன் முதற்கட்டமாக விவசாயிகளின் தொழில்முறைமைக்கு தேவைப்படுகின்ற உபகரணங்களை வ்ழங்குவதற்கு உத்தேசித்துள்ளேண் இதில் த்ங்கலின் அமைப்பிற்கு முன்னுரிமை வழங்குவேன் என்ற உறுதி மொழியைத் தருவதில் மகிழ்ச்சியடைகிறேன்” என்று கூறினார்.

ஹிஜ்ரத் விவசாய சிக்கன கடனுதவி சங்கத்தின் அருபது பேறுக்கு மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டு , நாபீர் பவுன்டேஷன் தலைவருடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் போது; அச்சங்கத்தின் சார்பில் உரையாற்றிய தலைவர் அவர்கள் எதிர்க் கொள்கின்ற பல தேவைகளை எடுத்துக் கூறியதுடன் ; எதிர்காலத்தில் நீங்கள் அரசியலில் களமிறங்கினால் எங்களின் முழு ஆதரவையும் உங்களுக்குத் தருவதாக வாக்குறுதி அளித்தனர்.

இதற்கு பொறியியலாளர் நாபீர் பதிலளிக்கையில் ,

“உண்மையில் விவசாயிகளுக்கு நான் உதவும் திட்ட்த்தை மேற்கொள்வது வெறும் அரசியல் ஆதாயத்தை அடிப்படையாக கொண்டல்ல. மாறாக நமது விவசாய பொருளாதாரத்தைப் பலப்படுத்துவதே எனது இலக்கு. நீங்கள் மட்டும் அல்ல. நமது பகுதியில் உள்ள இன்னும் பல விவசாய சங்கங்களும் என்னோடு கலந்துரையாட வுள்ளனர்.

இதன் முக்கிய நோக்கம் விவசாய மேம்பாடே அரசியல் அதிகாரமில்லாத இந்த சந்தர்ப்பத்தில் இவ்வாறான முயற்சிகளை எடுக்கும் என்னிடம் அரசியல் அதிகாரம் இருந்தால் இதனை விடவும் செயற்படுத்துவேன். அதற்கான சூழலை உருவாக்குவது உங்கள் பொறுப்பே” எனவும் சுட்டிக் காட்டினார்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe