Ads Area

வீரமுனை பெண் எழுத்தாளர் யுகதாரினி செசிலியாவின் கவிதைநூல் வெளியீட்டுவிழா.

(காரைதீவு  நிருபர் சகா)

வீரமுனை பெண் எழுத்தாளர் யுகதாரினி செசிலியா சோமசுந்தரத்தின் 'கரையைத்தேடு' எனும் கன்னிக் கவிதைநூல் வெளியீட்டுவிழா நேற்று (9) ஞாயிற்றுக்கிழமை காலை 9மணியளவில் வீரமுனை இ.கி.மி. பாடசாலையில் நடைபெறவுள்ளது.

வீரமுனை ஜங்கரன் கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் அதன் உபதலைவர் அ.சுதர்சன் தலைமையில் நடைபெறவுள்ள இவ்விழாவில் பிரதம அதிதிகளாக அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜ.எம்.மன்சூர் அம்பாறை மேலதிக மாவட்ட செயலாளர் க.விமலநாதன் சம்மாந்துறை பிரதேசசபைத்தவிசாளர் எ.எம்.எம்.நௌசாட் ஆகியோர் கலந்துசிறப்பிக்கவுள்ளனர்.

விசேட அதிதிகளாக நீதியமைச்சின் உதவிச்செயலாளர் எ.மன்சூர் சம்மாந்துறை பிரதேசசெயலாளர் எஸ்.எல்எம்.ஹனிபா உதவிப்பிரதேசசெயலாளர் எம்.எம்.ஹாஸிக் சிறப்பு அதிதிகளாக பேராசிரியர் றமீஸ்அப்துல்லா உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா மாவட்ட கலாசாரஉத்தியோகத்தர் ரி.எம்.றிம்சான் மாவட்ட இந்துகலாசார உத்தியோகத்தர் என்.பிரதாப் உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

நூல் வெளியீட்டுரையை என்.பிரதாப்பும் நயவுரையை பேராசிரியர் றமீஸ்அப்துல்லாவும் ஏற்புரையை நூலாசிரியை யுகதாரினி செசிலியாவும் நிகழ்த்தவுள்ளனர்.

வீரமுனையைச்சேர்ந்த பெண் எழுத்தாளர் யுகதாரினி செசிலியா சோமசுந்தரத்தின் அச்சுருப்பெறும் முதல்நூல் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe