தகவல் - முஹம்மட் றிஸ்விகான்.
சம்மாந்துறை பிரதேசத்தின் உடங்கா 2ல் உள்ள அம்பாறை 14ம் வீதியை சேர்ந்த குறுக்கு வீதி ஒன்று சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் A.C.M. சஹீல் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அகில இலங்கை மக்கள் காங்ரஸ் தலைவர் கௌரவ ரிசாத் பதியுத்தீன் அவர்களின் நிதியொதுக்கீட்டில் கொங்றீட் பாதையாக புணரமைக்கபடுவதற்கான வேலைகள் இடம்பெற்று வருகின்றது.
இதன் ஆரம்ப வேலைகள் நடை பெற்ற வண்ணம் இருந்து கொண்டிருக்கின்றது.. உடங்கா கிராமத்தின் மக்கள் பிரதேச சபை உறுப்பினர் சஹீல் அவர்களுக்கு நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவிப்பதோடு அம்பாறை 14ம் வீதியையும் புணரமைக்க கவனத்தில் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கின்றனர்.