Ads Area

சம்மாந்துறையை செழிப்பூட்ட பசுமைத் திட்டம்; அனைவருக்கும் திறந்த அழைப்பு.


தவல் - SWDC Media Unit.

பசுமை நிறைந்த வயல் வெளிகளாலும், நீரோடைகளாலும் சூழப்பட்ட ஒரு அற்புத பூமி நமது சம்மாந்துறை... 

நமது ஊரின் இந்த பசுமையை அதிகரித்து நிழல் மரம் சூழ்ந்த சம்மாந்துறையினை உருவாக்குவதற்காக சம்மாந்துறையில் உள்ள சமூக நல அமைப்பான SWDC ஒரு அழகிய செயற்திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது அதாவது சம்மாந்துதறை கைகாட்டி சந்தியில் இருந்து நெய்நாகாடு வரையான பாதைகளின் இரு மருங்கிலும் 300 மரக் கன்றுகளை நட்டு பராமரிப்பதற்கான திட்டம்.

இத்திட்டத்தினை வெற்றிகரமாக நிறைவேற்றி எமது எதிர்கால சந்ததிகளுக்கு அழகிய ஊரினை பெற்றுக்கொடுப்பது எமது கூட்டுப் பொறுப்பாகும். இதற்கு சகலரும் சேர்ந்து உழைக்க வேண்டும். குறைந்தது ஒவ்வொருவரும் ஒரு மரத்தையேனும் பராமரித்து செழிப்பான ஊரினை கட்டி எழுப்ப ஒன்றிணைவோம்.

இத்திட்டத்திற்கு, SWDC இன் வேண்டுதலுக்கு இணங்க அரசாங்கத்தினால் எமக்கு தேவையான நிழல் தரும் மரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. ஒரு மரத்தினை பாதுகாப்பு வேலியுடன் பராமரிப்பதற்கு ஆரம்ப செலவீனம் 1,000/= ஆகும்.

இந்த பெறுமதியான வேலைத்திட்டத்தினை எமதூரின் ஒவ்வொரு அமைப்புக்கள், தனவந்தர்கள் மற்றும் தொண்டர்கள் குறைந்தது ஒருமரத்தையேனும் பராமரிக்க முன்வருமாரு மிகத் தாழ்மையுடன் வேண்டுகிறோம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

முஸ்லிம் ஒருவர் ஒரு மரத்தை நட்டு வைத்து, அதிலிருந்து (அதன் இலைகள், கனிகள் ஆகியவை பறவைகளாலும் கால் நடைகளாலும்) உண்ணப்பட்டால், அதுவும் அவருக்கு ஒரு தர்மமாக அமையாமல் இருப்பதில்லை. அதிலிருந்து களவாடப்பட்டதும் அவருக்கு ஒரு தர்மமாக அமையும்; அதிலிருந்து வன விலங்குகள் உண்பதும் அவருக்கு ஒரு தர்மமாகவே அமையும். அதிலிருந்து பறவைகள் கொத்தித் தின்றதும் அவருக்கு ஒரு தர்மமாகவே அமையும்; அதில் எவரேனும் சேதம் விளைவித்தால் அதுவும் அவருக்கு ஒரு தர்மமாகவே அமையும். - இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

-முஸ்லீம்-















Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe