இருப்பதெல்லாம் போனால், இனி இருப்பவர்கள் பூச்சியம் எனும் நிலைப்பாட்டுக்கு இலங்கை முஸ்லிம்கள் உயர் பதவிகளில் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்.
அதவாது இன்றையை கால சூழ்நிலையில் எமது நாட்டில் நாம் சிறுபாண்மையாக வாழ்ந்தாலும் பெரும்பாண்மையின் ஆதிக்கத்தில் கொத்தடிமைகளாக திகழ வேண்டிய சூழ்நிலைக்குள் அனுவனுவாக இட்டுச் செல்லப்படுகின்றோம் எனும் விடயம் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.!
இலங்கையின் அதி உயர் பதவிகளான SLES, SLAS போன்ற பதவிகளுக்கும் அதே போல் அதனோடு இணைந்த பல்துறை உயர் பதவிகளுக்கும் அண்மைக்காலங்காளாக குறிப்பிட்டுக் கூறினால் பல வருடங்களாக முஸ்லிம்களின் வகிபாகம் குறைந்தளவாகவே உள்ளன.
இவற்றுக்கு காரணம் நமது சமூகத்தினரிடம் உள்ள அறிவியல் குறைபாடா?!,
இல்லவே இல்லை. இவை அனைத்தும் திட்டமிட்டு வீசப்படுகின்ற ஸ்னைப்பர் சதி. அதாவது எவ்வளவுதான் படித்தாலும் சுழியோட்ட அரசியல் மந்திரங்களில் சிறுபாண்மையான எமது சமூகத்தினர் புறந்தள்ளப்பட்டு வருகின்றனர்.
இதற்கு சான்று கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்ற இலங்கை கணக்காளர் சேவைக்கான திறந்த போட்டிப் பரீட்சை (Open Completion Examination of Accounting Service – 2016 / 2018).
22 – 28 வயதுக்குட்பட்ட B.com அல்லது BBA பட்டதாரிகள் இப் பரீட்சைக்கு தோற்றமுடியும். அவ்வாறு தோற்றும் பரீட்சாத்திகள் சித்தியடைய தவறும் பட்சத்தில் வாழ்நாளில் மொத்தமாக இரு தடவைகள் மாத்திரமே பங்குபற்ற முடியும்.
இப்படியான கடும் சட்டங்களை கூறாகக் கொண்ட குறித்த போட்டிப் பரீட்சையினை பெரும்பாலானோர் தீர்ந்த ஊக்கத்துடன், உணர்வோடு கலந்து முகங்கொடுப்பதும் வழமை. அப்படி தியாகித்து படித்துச் சென்றாலும் விரல் விட்டு எண்ணும் அளவுக்கே தெரிவும் செய்யப்படும்.
ஆனால், எது எவ்வாறாக இருந்தாலும் அனுமானத்தை எழுமாறகக் கொண்ட சுழியோடி சூரையாடும் கேவலமான கலாசாரம் அண்மைக் காலமாக நமது நாட்டில் இருப்பது நம்மில் பலரும் அறியாத ஒன்று.
இந்த விடயத்தை உதாரணம் மூலம் உணர இம்முறை இடம்பெற்ற கணக்காளர் பரீட்சையை எடுத்துநோக்கலாம். அவ்வறே அதை நாம் எடுத்து நோக்கினால்,
கடந்த 2017 ஏப்ரல் மாதம் நடாத்தப்பட்ட இலங்கை கணக்காளர் சேவைக்கான திறந்த போட்டிப் பரீட்சை சில காரணங்களால் முடக்கப்பட்டு மீண்டும் கடந்த 2018 ஜனவரி 27 – 28 மற்றும் பெப்ரவரி 03 ஆகிய தினங்களில் பரீட்சை நடாத்தப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் 2017 ஏப்ரல் மாதம் இடம்பெற்ற பரீட்சை கடினமாக இருந்த போதிலும் 2018 இல் மீள் அழைத்து நடாத்தப்பட்ட பரீட்சை இலகுவான முறையிலும் அமைந்திருந்தது. ஆனால் குறித்த பரீட்சையில் இந்நாட்டில் உள்ள அத்தனைபேரிலும் சிறுபான்மையிலிருந்து ஒரேயொரு முஸ்லிம் பெண் பரீட்சார்த்தி (ஏறாவூரைச் சேர்ந்தவர்) மாத்திரமே தெரிவாகியுள்ளார்.
இதிலிருந்து நாம் எல்லோரும் சாதாரணமாக சிந்திக்கும் விடயம், “நம்மவர்கள் படிக்கைவில்லை, முயற்சி செய்யவில்லை அதனால் கிடைக்கவில்லை.” இந்தக் கூற்று பௌதீகமானதாக இருந்தாலும் இங்கு இடம்பெற்ற தெரிவின் பின்னனியில் பல மோசடிகள் உள்ளதாக குறித்த பரீட்சார்த்திகள் அங்கலாய்க்கின்றனர்.
அது எந்தளவு என்றால் ஒரு சிலர் வெளிநாடுகளில் வேலைக்கு சென்றிருந்த போதிலும் இப் பரீட்சைக்காக திடீர் சொந்த விடுமுறையில் வந்திறங்கி பரீட்சைக்கு முகங்கொடுத்துள்ளர். இரவு, பகலாக அயராது விழித்திருந்து படித்திருக்கின்றனர். ஆனால் அறுவடையோ பூச்சியம்.
அப்படியான நிலைமையில் இருந்த விடாமுயற்சி வீண் போவதென்றால் அது யாராலும் ஜீரணிக்க முடியாதனவையே!. சாதாரணமாக நமது அறிவுக்கு எட்டியது போல் சிந்தித்தாலும் கூட இத்தனை இலட்சம் மக்களில் இத்தணை ஆயிரம் பேர் தோற்றியதில் 6 வீதமாவது அறிவானவர்கள் இருக்கமாட்டார்களா?
ஏன் இல்லாமல்!, நிச்சயமாக இருக்கிறார்கள். சந்தர்ப்பம் கிட்டியும் சதி செய்த விதி அத்தனையும் இழிநிலைக்கு கொண்டு செல்கின்றது.
மேலும், குறித்த இப் பரீட்சை இடம்பெற்று 5 மாதங்களில் வழக்கமாக வெளியாகின்ற பெறுபேறு இம்முறை சுமார் 9 மாதங்களின் பின்னர் வெளியாகியுள்ளமையும் கேள்விக்குறியை ஏற்படுத்தியுள்ளதுடன், தெரிவு செய்யப்பட்ட கிட்டத்தட்ட 120 கணக்காளர்களில் ஒரேயொரு சிறுபாண்மைப் சிறுபாண்மைப் பரீட்சார்த்தி எனும் போது இது கற்பனையில் கூட சாத்தியமாகாத விடயமாக சித்திரிக்கின்றது.
இந்த பெறுபேற்றைக் கண்ட பல பரீட்சார்த்திகள் ‘நான் கண்டது கனவா?’ என வியந்த சம்பவங்களையும் செவியுறக் கிடைத்தது.
அத்தனை பரீட்சார்த்திகளும் (119) சிங்கள மொழி மூலமும் தமிழ் மொழி மூலம் ஒரேயொருவரும் தெரிவுசெய்யப்பட்டமையை குறித்த பரீட்சைக்கு தோற்றிய அத்தனை தமிழ்மொழி முல பரீட்சார்த்திகளும் வன்மையாக கண்டித்து அதற்குண்டான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந் நிலையில் கடந்த 27 ஆம் திகதி (2018.11.27) ஒரு பரீட்சார்த்தியினால் பொதுச் சேவை ஆணைக்குழுவில் செய்யப்பட்ட முறைப்பாடும் இது குறித்த சில மாற்றங்களுக்கும் போராட்டத்தின் முன்னிலை எடுகோளாக அமையலாம்.
இந்த அநீதிக்கு எதிராக பலரும் இவர் போன்று முறைப்பாட்டுக் கடிதங்களை அனுப்பியுள்ளதாகவும் அறியக் கிடைத்த நிலையில், குறித்த கடிதத்தின் பின்னனியில் ஒரு பரீட்சார்த்தியிடம் இது குறித்து வினவியபோது அவர் கூறியது இதுதான்,
“எமக்கு நடந்துள்ள இந்த அநீதி சம்பந்தமாக பல உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை பெற்ற வண்ணம் இது விடயத்தினை சட்ட ரீதியான நடவடிக்கைக்கு உட்படுத்த எத்தணித்த வண்ணம் உள்ளோம்.
அதே நேரம் இந்த விடயத்தில் நீதியினைக் கோரும்படி பல அரசியல் பிரமுகர்களையும் சந்தித்து உரையாடினோம். அப்படி உரையாடியதில் எமக்கு கிடைத்தது நேர விரயம் மட்டும் தான், ‘நாங்கள் என்ன செய்வது, நாட்டின் தற்போதைய அரசியல் நிலை சீரில்லை’ என கூறி நழுவி விடுகின்றனர்.
இத்தனையும் தாண்டி நாங்கள் தெரிவு செய்து ஒரு பிரதிநியாக கருதி ஒரு பாரளுமன்ற உறுப்பினரிடம் இரவு பகலாக அலைந்தும், அவர் அதை காதில் வாங்கவில்லை.” – என மன வருத்தத்துடன் தெரிவித்தார்.
அதே நேரம் மேலும் ஒர பரீட்சார்த்தியினால் அனுப்பட்ட கடித்தில் ஆணைக் குழுவிடம் முன் வைக்கப்பட்ட சில வினாக்களும் பெறுமதியானவை அவை,
01. Why Sri Lankan Accountant’s Service Examination 2016(2017) was cancelled?
02. How it can be possible to become same cutoff marks (365) for last two times in a open competitive examination. (2014 and 2018)
03. Why do not release our individual results sheet up to now? Last time (2014) we got my individual results sheet at same day of results released.
04. How the individual results will affect the recruitment process. (If we asked to PSC, reply was “ we will issue individual results after the recruitment of new batch. Because it will affect recruitment” )
05. How can be passed 99.2% Sinhala Medium candidates in this competitive examination? Is it possible?
06.Why is that so late to release this results? (2014 and previously was maximum 06 months to release results).
07. If you all are did a correct job, so why do not allow us to the re-correction?
(இந்த வினாக்கள் இலகு மொழிநடையில் இருப்பதால் தமிழாக்கம் குறிப்பிடவில்லை)
இவற்றையெல்லாம் வைத்து நோக்கும் போது, இந்த பாகுபாடும் அநீதி இன்று நேற்றல்லா ஆண்டாண்டு தொட்டு நடந்து வருகின்ற ஒரு ‘சைலன்ட் சைனைட்’. இவை ஒரு போதும் ஊதிப் பெருப்பதில்லை. உள்ளுக்குள்ளேயே மறைகின்றது.
பரீட்சையில் சித்தியடையாதோர் சதியை விட தன் கெதியில் மனமுடைந்து அப்படியே அமைதி காக்கின்றனர்.
அந்த நிலை இன்று மாறி தற்கால இளைஞர்கள் இதற்கொரு விழிப்புப் படலத்தை தோற்றுவிக்க தயாராகியுள்ளமை வரவேற்கத்தக்கது.
எனவே, இது விடயம் சம்பந்தமாக பாராளுமன்றத்தில் எமது பிரதிநிதிகள் குரல் கொடுக்க வேண்டும். எமது சமூகத்தின் எதிர்கால இருப்புக்களின் முதுகெலும்பு உயர் பதவிகளில் எம்மவர்களும் அமர்தலே!. இதை விடுத்து இனப் பாகுபாடு எனும் போர்வையில் சதிக்கு சதி தலைவிரித்து ஆடுமானால் தற்போதுள்ள SLES, SLAS இது போன்ற உயர் அதிகாரிகள் ஓய்வு பெறும் காலத்தில் மீள் நிரப்ப எவருமே எமது இல்லை என்பதே எழுதப்பட்ட விதியாக மாறிவிடப்போகின்றது.
✍️கியாஸ் ஏ. புஹாரி